தி.மு.க.வில் இருந்து அழகிரி நிரந்தர நீக்கம்?: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தலைமை முடிவு
திமுகவின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த வாரம் தி.மு.க.வில் இருந்து மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகிரி, தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று குற்றம் சாட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
ஜன.30 நாளை மதுரையில் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் மு.க.அழகிரி. பின்னர் அதற்கு அடுத்த நாள் (ஜன.31) தனது அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் எறு கூறியிருந்தார். மேலும், பல திடுக்கிடும் உண்மைகளயும் வெளியிடுவேன் என்று கட்சிக்கு மிரட்டல் விடுத்திருந்தார். இது தி.மு.க. மூத்த தலைவர்களிடம் பெரும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மு.க அழகிரியிடம் அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தி.மு.க. திட்டமிட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்கும்படி அழகிரிக்கு நிபந்தனை விதிக்கப்படவுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு ஒரு வாரத்துக்குள் அழகிரி பதில் அளிக்கவில்லையெனில் அழகிரி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம் என்று கூறுகின்றனர்.