புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

ஏடிஎம் மையத்தில் கிடந்த ரொக்கத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த அலுவலர்
புதுக்கோட்டை நிஜாம் காலனியைச் சேர்ந்தவர் சி. தண்டபாணி. ஓய்வு பெற்ற அரசு அலுவலரான இவர், புதுக்கோட்டை தெற்கு நான்காம் வீதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையத்துக்குப்
பணம் எடுக்கச்சென்றார்.

அந்த மைய இயந்திரத்தில் தனது அட்டையை பயன்படுத்த முயன்றபோது, அதில் பணம் வெளியில் வந்தபடி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அட்டையைப் பயன்படுத்தும் முன்னதாகவே பணம் வந்துள்ளதே என்ற குழப்பத்துடன் அதை எடுத்து எண்ணிப்பார்த்தபோது ரூ. 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. 
அந்தப்பணம் தனக்கானது இல்லை என்ற நிலையில், சற்றும் யோசிக்காமல் பணத்தை எடுத்துக்கொண்டு நகரக்காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைக்கூறி அங்கிருந்த காவல் ஆய்வாளர் எம். ராமமூர்த்தியிடம் பணத்தை ஒப்படைத்தார். 
இதையடுத்து பாரத ஸ்டேட் வங்கியின் பிரதானக் கிளைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வங்கி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை ஒப்படைத்தார். 
ஏடிஎம்- அட்டையைப் பயன்படுத்திய யாரோ ஒருநபர் பணம் வருவதற்குள்ளாகவோ, அல்லது அது வெளியில் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவோ  அந்த இடத்தை விட்டு அகன்ற பின் சற்று நேரம் கழித்து அந்த அட்டையின் உபயோகத்துக்கான பணம் வெளியில் வந்திருக்கலாம் எனவும், அது  திருடர்கள் கண்ணில்  அகப்பட்டிருந்தால் காணாமல்  போயிருக்கும் எனவும் காவல் ஆய்வாளர் தெரிவித்தார். 
 மேலும், இந்தப்பணத்தை தவறவிட்டவர்கள் உரிய ஆதாரங்களுடன் வங்கி அதிகாரிகளை அணுகி விளக்கமளித்து தங்களது  பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றார் அவர். 
  பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்ற பழமொழியை பொய்யாக்கிய ஓய்வு பெற்ற அரசு அலுவலர் தண்டபாணியின்  நேர்மையை காவல்துறையினரும், பொது மக்களும் பாராட்டினர்.

ad

ad