உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக ஆதாரம் இருக்கிறது என்று நான் கூறவில்லை?: அழகிரி அதிர்ச்சி பதில்
உள்கட்சி தேர்தல் விதிமீறல் தொடர்பாக என்னிடம் உள்ள ஆதாரங்களை 31ம் தேதி வெளியிடுவேன் என்று நான் கூறவில்லை! என்று ஆச்சரியம் கலந்த பதிலைக் கூறி, செய்தியாளர்களுக்கு அதிர்ச்சியூட்டினார் மு.க.அழகிரி.
மதுரையில் குறிப்பிட்ட சில தொலைக்காட்சி சேனல்கள், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, செய்தியாளர்கள் கேட்ட ஓரிரு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது செய்தியாளர்கள், உள்கட்சித் தேர்தல் விதிமீறல் தொடர்பாக வரும் 31ம் தேதி ஆதாரங்களை வெளியிடுவேன் என்று சொன்னீர்களே... என்ன ஆதாரங்கள் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு அழகிரி ஆச்சரியத்தை வெளிக்காட்டி, நான் அப்படிக் கூறவில்லை என்றார்.
உருவபொம்மை எரிப்பு விவகாரம் தொடர்பாகக் கேட்கப் பட்டதற்கு, அவர்கள் என் பிறந்த நாளை முன்னரே கொண்டாடியுள்ளனர் என்று கூறினார்.
தன்னிடம் சமரசம் பேச திமுகவில் இருந்து யாரும் வரவில்லை என்று கூறிய அழகிரி, எனக்கு நோட்டீஸ் வழங்கிய நிலையில் சமரசம் பேச எப்படி வருவார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தேமுதிக குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்துச் சென்றுவிட்டார்.