புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2014

சிறிலங்காவுக்கு எதிராக நிஷா பிஸ்வாலை களமிறக்குகிறது அமெரிக்கா – கொழும்பு, லண்டன், ஜெனிவாவுக்கு விரைகிறார்

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மூன்றாவது தீர்மானத்தைக் கொண்டு வரத் தயாராகியுள்ள அமெரிக்கா, இது தொடர்பான ஏற்பாடுகள், ஒழுங்குகளைக் கவனிக்க, இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரியை சிறிலங்கா, பிரித்தானியா, சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பவுள்ளது.
தெற்கு மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், முதற்கட்டமாக நாளை மறுநாள் கொழும்புக்குப் பயணமாகவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நேற்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இதுபற்றிக் கூறப்பட்டுள்ளது.

“இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், வரும் 31ம் நாள் தொடக்கம் பெப்ரவரி 2ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர், சிறிலங்கா அதிகாரிகளைச் சந்தித்து, போருக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட, இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

தனது பயணத்தின் போது, யாழ்ப்பாணத்துக்கும் செல்லவுள்ள பிஸ்வால், அங்கு வடக்கு மாகாணசபை அதிகாரிகளையும், சிவில் சமூகத் தலைவர்களையும் சந்தித்து பேசுவார்.

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு, பிரித்தானிய அரசுப் பிரதிநிதிகளை சந்திப்பதற்காக பிஸ்வால் வரும் 3ம் நாள் லண்டன் செல்வார்.

பின்னர் அவர் ஜெனிவா சென்று, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா மீது நாம் கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்த சந்திப்புகளை நடத்தவுள்ளார்.

இந்த தீர்மானம், ஏற்கனவே 2012, 2013ம் ஆண்டுகளில், நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் போன்ற விடயங்களில் சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் என்று கோரும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இருந்து கட்டியெழுப்பப்படும்.” என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ad

ad