www.pungudutivuswiss.com
பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோ கெலவல்ல மற்றும் பலயா மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
www.pungudutivuswiss.com
பேலியகொட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் மனித பாவனைக்குத் தகுதியற்ற 30,000 கிலோ கெலவல்ல மற்றும் பலயா மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை எதிர்கொள்வதற்காக, இலங்கையினால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையை தயாரிக்கும் பணிகள் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது |
மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது |
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது. |
பெற்றோலிய கூட்டுத்தாபனமும் பெற்றோலிய அமைச்சரும் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் சில உண்மைகளை மறைக்கின்றனர் என்பது அவர்களின் நடத்தையில் இருந்து தெளிவாகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரு லீற்றர் எரிபொருளை 250 ரூபாவில் வழங்க முடியும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்ற போதிலும் அதனை வழங்க முடியுமா இல்லையா என்பதை அமைச்சர் ஆராயாமல் இருப்பது பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார் |
சுமார் ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த தம்பதியரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினர் இன்று (9) மாலை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான தம்பதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது |
இலங்கையில் 16 வயது முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிலாளர் அமைச்சு தயாராகி வருகிறது. தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரை |
வவுனியாவில் மீண்டும் கோவிட் தொற்று காரணமாக ஒருவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு இன்று(9) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் மூச்சு திணறல் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது |
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று நடைபெறவிருந்த கலந்துரையாடலில் தாம் பங்குகொள்ளப் போவதில்லை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. உத்தேச சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று(09) மாலை இடம்பெறவிருந்தது |
இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது. விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு சதொச ஊழியர்களை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியதன் மூலம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக மூவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது |
காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டகளத்தின் 123ஆவது நாளான இன்றும் மக்கள் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கோட்டா கோ கம பகுதியில் பெருமளவான தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டிருந்தாலும், ஒரு சில கூடாரங்கள் அகற்றப்படாமலே இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் போராட்ட மேடைப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது |
2022 ஆகஸ்ட் 5ஆம் திகதியன்று நடைமுறைக்கு வரும் வகையில் களைகொல்லியான கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடையை இலங்கையின் நிதி அமைச்சகம் நீக்கியுள்ளது. நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்ட வர்த்தமானியின் அடிப்படையில் தடைப்பட்டியலில் இருந்து கிளைபோசெட் நீக்கப்பட்டுள்ளது |
186 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தலா 3 அணிகளை களம் இறக்கியுள்ளது. 8-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. ஓபன் பிரிவில் இந்தியா 1-வது அணி, வலுவான அர்மேனியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-வது அணி 1½-2½ என்ற புள்ளி கணக்கில் அர்மேனியாவிடம் வீழ்ந்தது. இந்திய அணியில் விதித் குஜராத்தி, அர்ஜூன் எரிகாசி, நாராயணன் ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் டிரா கண்டனர் |
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெற்றி பெற்று தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அசத்தினார். காமன்வெல்த் போட்டியில் பிவி சிந்து தங்க பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும் |
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது.இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்றுகறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்துவருகின்றதினை அனுமதிக்க முடியாது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமானசெல்வம் அடைக்கலநாதன்தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்துள்ளார் |
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய மோதல் நிலைமை மேலும் தீவிரமடைந்தால் இலங்கை போன்ற வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய நிலைமை தொடர்ந்தும் நீடித்தால், சர்வதேச நிதியங்களைப் பெறும் இலங்கையின் திறன் மற்றும் கடன் மறுசீ |
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அடுத்தவாரம் வியாழக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்கான வீசா காலம் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது |
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த வாரத்தில் அதற்கான சாதகமான தீர்மானங்கள் எட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது |
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடதூத்துக்குடி தொகுதி மக்களவை எம்.பியான கனிமொழி கருணாநிதியை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். |
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை கொடூரமான முறையில் கொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் நேற்று ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர் |
யாழ் மாவட்டத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள் எனவே அனைவரையும் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார் |
மின்சார வழங்கல் தொடர்பான சகல சேவைகள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலைகளில் மருந்தகங்கள் நோயாளர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல், முதியோர் இல்லங்கள் மற்றும் சிகிச்சையளித்தல் போன்ற சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன |
காலிமுகத்திடலில் இருக்கும் பண்டாரநாயக்கவின் சிலை அருகாமையில் இருக்கும் “கோட்டா கோ கம”வுக்கு பொலிசார் காலக்கெடு விதித்துள்ளனர் |
பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்குவதை முன்னிறுத்தி தேசிய சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். |
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் விக்னேஸ்வரன் அங்கம் வகித்தால் விக்கி கோ கொழும்பு என்கிற கோஷத்தை எழுப்பும் முதல் ஆளாக நானே இருப்பேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் அருந்தவபாலன் தெரிவித்தார் |
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் |
குறுகிய காலத்திற்காக அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினப் பிரதிநிதியொருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். |
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரட்டாவின் கைது தொடர்பில் நக்கலாக பேஸ்புக்கில் பின்னூட்டம் செய்துள்ளார் |
"சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார் |
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த மேலும் 47 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர் |
கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். |
காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வா |
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது |
தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார் |
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டது. |
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார் |
அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன. |
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன |
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார் |
சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது |
எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது |
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடிய அரசு தடைகளை விதிக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார் |
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது |
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார் |
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது |
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது |
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார். |
கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன |
புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது |
யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன |
ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான |
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. |
எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார் |
ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார் |
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் |