புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜூலை, 2022

புதிய அரசுடனான அணுகுமுறை - தமிழ் சிவில் அமைப்புகள் கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

வடக்கு, கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் சிவில் அமைப்புக்கள் தற்போது வரையில் இரண்டு தடவைகள் வரையில் கூடி இவ்விடயம் சம்பந்தமாக ஆராய்ந்துள்ளன.

இதன் அடுத்தகட்டமாக சிவில் அமைப்புக்கள் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் நிபந்தனைகள் உள்ளடங்கலான ஆவணமொன்றை தயாரிக்கவுள்ளதோடு அதனை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அரசியல் கட்சிகளை அழைத்து பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தி செயல்முறைகள் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான அழுத்தம் ஆகியன தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள போதும் தமிழ்த் தலைமைகள் விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் உரிய கலந்துரையாடல்களை முன்னெடுத்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

அதேபோன்று அரசியல் ரீதியாகவும் எவ்விதமான நகர்வுகளும் அற்ற சூழல்கள் காணப்படுகின்றன. ஆகவே அரசியல் தரப்புக்கள் தமது செயற்பாடுகளை வெகுவாக சுருக்கியுள்ளதன் காரணமாக சிவில் தரப்புக்கள் இந்த விடயத்தினை கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளன.

ad

ad