புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2022

சீனாவுடன் பேசுமாறு கை காட்டியது ஐ.எம்.எவ்!

www.pungudutivuswiss.com



இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன், ரொய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, பல மாதங்களாக எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியால் சமீபத்தில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எரிபொருள் இறக்குமதியை 12 மாதங்களுக்கு கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது. சர்வதேச நிதி நிர்வாக நிறுவகத்தின் தரவுகளின்படி பீஜிங்கிடம் இலங்கை 6.5 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது.

எனவே, கடனை நிலை நிறுத்துவதை உறுதிப்படுத்த மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும். இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைளில் ஈடுபட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad