புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2022

Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அதிபருக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று(19) நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

For the greater good of my country that I love and the people I cherish I hereby withdraw my candidacy for the position of President. @sjbsrilanka and our alliance and our opposition partners will work hard towards making @DullasOfficial victorious.

— Sajith Premadasa (@sajithpremadasa) July 19, 2022
“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், மக்களின் நலனுக்காகவும் நான் அதிபர் பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் டலஸ் அழகபெருமவை வெற்றி பெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டலஸ் அழகப்பெரும அதிபராக தெரிவானால், பிரதமர் பதவி சஜித்திற்கு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

ad

ad