புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2022

கூட்டமைப்புடன் பேசுவார் ரணில்!

www.pungudutivuswiss.com

"சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சாதகமான பதிலைத் தெரிவித்துள்ள நிலையில், அவர் தலைமையிலான அணியினருடன் ஜனாதிபதி நேரில் பேச்சு நடத்துவார் என, பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்

"சர்வகட்சி அரசு தொடர்பில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரில் பேச்சு நடத்துவார். இதன்போது, சர்வகட்சி அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு எந்த விதத்தில் அமையும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிவார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ்கின்றது. எனவே, நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதது" என்றார்

ad

ad