புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஜூலை, 2022

புலம்பெயர் தமிழர்கள் இரகசியப் பேச்சுக்கு அழைத்தனர் !

www.pungudutivuswiss.com


தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்

பாராளுமன்றில் புதன்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டத்தின் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் மிகவும் நெருக்கடியானதொரு சூழ்நிலையில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளனர்.எவ்வாறான பின்னணியில் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதை சகலரும் நன்கு அறிவார்கள்.

நாட்டு மக்கள் வீதிக்கி இறங்க முன்னர் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்ற யோசனையை முன்வைத்தோம்.இருப்பினும் அந்த யோசனையை அரசியல் கட்சிகள் ஏதும் ஏற்றுக்கொள்ளவில்லை.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு எதிர்கட்சி தலைவருக்கு சுதந்திர கட்சியின் தலைவர் ஊடாக அழைப்பு விடுத்தோம்.இருப்பினும் எதிர்க்கட்சி அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை.மூன்று வாரத்திற்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதியிடம் அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தோம் அதனை தொடர்ந்தே தற்போதைய அரசாங்கம் அப்போது ஆரம்பமானது.

அரசியலமைப்பிற்கு அமைவாகவே செயற்பட்டோம்,அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் போது விளைவு பாரதூரமானதாக அமையும்.விருப்பத்துடன் அவசரகால சட்டம் கொண்டு வரவில்லை.நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அனைவரும் அவதானம் செலுத்த வேண்டும்.பாதுகாப்பினை கருத்திற்கொண்டே அவசரகால சட்டம்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.முப்படையினருக்கு எதிராக செயற்படும் போது அவர்கள் எவ்வாறு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவார்கள்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.

சகல தரப்பினரது எதிர்பார்ப்பிற்கமைய இன்று (நேற்று)அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை சபையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்தேன்.இருப்பினும் ஒருசில விடயங்கள் குறித்து விமர்சனம் எழுந்துள்ளது.சகல தரப்பினரது இணக்கப்பாட்டிற்கமைய எதிர்வரும் வாரம் 22ஆவது திருத்த வரைபை சபைக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக புதிய அரசியலமைப்பினை உருவாக்க அவதானம் செலுத்தியுள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு காலம் காலமாக பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.நல்லாட்சி அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவி வகிக்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கையினை முன்னெடுத்தேன். காணாமலாக்கப்பட்டோரது காரியாலம் ஸ்தாபிப்தோம். இருப்பினும் அதன் செயற்பாடு மந்தகரமாக உள்ளது. துரிதப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளோம். நட்டஈடு வழங்கும் காரியாலத்தின் செயற்பாட்டை விரிவுப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரை பிற இனத்தவர்கள் என ஒருபோதும் வேறுப்படுத்தவில்லை.இலங்கையர்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டு ஒன்றினைந்து செயற்படுகிறோம். புலம்பெயர் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்தேன், அவர்கள் இரகசிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்கள்.

இரகசியமாக பேச்சுவார்த்தை தேவையில்லை, வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுவோம் என்றேன். பல்வேறு காரணிகளினால் அவர்கள் பிற நாடுகளில் வாழ்கிறார்கள். பிரச்சினைகளை மாத்திரம் கதைத்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. நாளைய சமூகத்தினருக்கு இந்த பிரச்சினைகளை மீதமாக்க வேண்டாம்.பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,சுமந்திரன் உங்களிடம் குறிப்பிடுகிறேன்.இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காண்போம்.

புலம்பெயர் அமைப்புக்களின் தலைவர்களுக்கு வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.நாட்டை முன்னேற்றுவோம்.நாம் இலங்கையர்கள் என வெளிநாடுகளில் குறிப்பிடுவது வெட்கமாகவுள்ளது.பிரச்சினைகளுக்கு ஒன்றினைந்து தீர்வு கண்டு கௌரவமான சமூகம் என்பதை உறுதிப்படுத்துவோம்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன்,தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.சாதாரன மக்களுக்கு எதிராக அவசரகால சட்டம் ஒருபோதும் செயற்படாது.சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராகவே அவசரகால சட்டம் செயற்படும்.சட்டத்திற்கமைய செயற்பட்டால் மாத்திரமே முன்னேற்றமடைய வேண்டும் என்றார்.

ad

ad