புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2022

சர்வகட்சி அரசில் சிறுபான்மையின பிரதமரை நியமிக்க வேண்டும்

www.pungudutivuswiss.com


குறுகிய காலத்திற்காக அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினப் பிரதிநிதியொருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்காக அமைக்கப்படும் சர்வகட்சி அரசாங்கத்தில் சிறுபான்மையினப் பிரதிநிதியொருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது உளவியல் ரீதியான யுத்தத்தினை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஆர்ப்பாட்டங்களினால் ஜனாதிபதியாகத் தெரிவான அவர் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையே அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றார்.

போராட்டங்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பது ஜனாதிபதியினதும் அவரது அரசாங்கத்தினதும் கடமையல்ல. மாறாக ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குவதே அவர்களின் பொறுப்பாகும்.

இன்று நாட்டில் சட்டமும் அமைதியும் இருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக பகிரங்கமாக மனிதப் படுகொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மீண்டுமொரு உப கலாசாரமொன்று உருவாகிக் கொண்டிருக்கின்றதா? இவை அரசாங்கத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றனவா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. எமது நாட்டை சர்வதேசம் அங்கீகரிக்கவில்லை.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலின் போது வழங்கப்பட்ட மக்கள் ஆணை இன்று முற்றாக மாற்றமடைந்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சிக்கும் , பொதுஜன பெரமுனவிற்கும் 5 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவாளர்களே உள்ளனர்.

எனவே நாட்டை ஏமாற்றும் சர்வகட்சி அரசாங்கத்தில் நாம் ஒருபோதும் பங்கேற்கப் போவதில்லை. எனவே நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

இனவாதத்ததை தூண்டி மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் இரு வருடங்களிலேயே பதவி துறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களது ஆட்சியில் மக்களின் கனவுகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. இன்று பெற்றோல் மற்றும் எரிவாயு உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்வதே மக்களின் கனவாகவுள்ளது.

நாட்டை இந்த நிலைமைக்கு உள்ளாக்கிய அஜித் நிவாட் கப்ரால் , பி.பி.ஜயசுதந்திர உள்ளிட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

அதனை விடுத்து தற்போதுள்ள அரசாங்கமும் , பாராளுமன்றமும் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு பதவி வகிக்கும் எனில் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.

விரைவில் பொதுத் தேர்தலுக்குச் செல்லக் கூடியவாறு குறுகிய காலத்திற்கு சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதாகக் கூறினால், அது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும்.

அந்த அரசாங்கத்தில் சிறுபான்மை இனத்தவர் ஒருவரை பிரதமராக நியமித்து ஒரு முன்னுதாரணமாக செயற்பட முடியும். அதனை விடுத்து கால வரையறையற்ற சர்வகட்சி அரசாங்கத்தில் எம்மால் இணைய முடியாது என்றார்

ad

ad