புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2022

ஐஎம்எவ் உடன்பாடு பின்தள்ளிப் போனது!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.
எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது

அமைதியான போராட்டங்கள், வன்முறையாக மாறியமையே இந்த தாமதத்துக்கான காரணம் என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”போராட்டங்கள் காரணமாக, கடந்த வாரம் இலங்கைக்கு பயணம் செய்யவிருந்த உலக உணவு திட்டத்தின் தலைவர், தனது பயணத்தை ஒரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.

இலங்கையர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காமல் போயுள்ளன. அவை ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எனவே இன்று இலங்கைக்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் சமாதானமுமே தேவை. கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்கள் மூலம் அதிகாரத்தை கைப்பற்ற முனைந்தால், அவர்கள் நிராயுதப்படுத்தப்படுவார்கள்.

இதேவேளை அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வந்து எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும். அத்துடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்" என கூறியுள்ளார்.

ad

ad