புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2022

நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா

 .ஜெர்மனி தவிக்கும் எரிவாயு இன்மை www.pungudutivuswiss.com

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீதான போரால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான

நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீதான போரால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது

இந்த நிலையில், இயற்கை எரிவாயு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், பல்வேறு நாடுகளுக்கான எரிபொருள் விநியோகத்தை ரஷ்யா குறைத்த பின்னர், குளிர் காலத்துக்கான சேமிப்பு தங்களிடம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் ஜேர்மனி தெரிவித்துள்ளது.

இதனால் தொழில்துறை நிறுவனங்கள் தங்கள் பயன்படுத்தும் இயற்கை எரிவாயுவின் அளவைக் குறைக்க வேண்டும் என்று ஜேர்மன் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனி வரை நீடிக்கும் Nord Stream 1 பைப்லைன் வழக்கமாக ஜூலை 11-ம் திகதி ஆண்டு பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்படும். 10 நாட்கள் வரை நீடிக்கும் இந்தப் பராமரிப்புப் பணிகள் முடிந்த பின்னர் இந்த பைப்லைன் மீண்டும் திறக்கப்பட்டு இயற்கை எரிவாயு சப்ளை தொடரும்.

ஆனால் இந்தமுறை அந்த பைப்லைனை திறக்கப்போவதில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. மட்டுமின்றி இந்த குளிர்காலத்தில் ஜேர்மனியில் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனால், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ad

ad