புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூலை, 2022

பாராளுமன்ற உறுப்பினர்களின் நடுநிலை  கொள்கை சரியா 
நடுநிலை  வகிப்பது என்பது  ஒரு  தரப்பை  வெல்ல வைப்பது என்பதே  உண்மை . மக்கள்   வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை   தெரி வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு  கிடைக்கும் வாக்களிப்பு உரிமையை  கடடாயம் பயன்படுத்த வேண்டும் 5  வருடத்துக்கும்  நாங்கள் நடுநிலை என்று  சொல்லிக்கொண்டு இருப்பது  துஸ்பிரயோககம் செய்வது தானே . ஒவ்வொரு பா  உ இனதும் இந்த வாக்கு வீணடிக்கப்படுகிறது . முக்கியமாக தமிழர்  தங்கள் வாக்கு பலத்தை   இப்போது போன்ற இக்கடடான   கட்டங்களில் தமிழரின் முக்கிய அவசர  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  கேட்டு  கோரிக்கையை வைத்து  நிபந்தனை மூலம் வாக்கு செலுத்துவதே சிறந்தது .அதனை விட்டுவிட்டு எமக்கென்ன  யார்  வென்றாலும் தோற்றாலும் நாங்கள் தேசியவாதிகள் என்றிருப்பது  உங்கள் வாக்குப்பலத்தை  வேணடிப்பதே .அப்படியென்றால் பாராளுமன்ற அரசியலுக்கு  போயிருக்கக்கூடாது .தேசியம் தனிநாடு தமிழீழம் என்ற கொளகை உள்ளவர்கள்  என்று  பேசி திரிவது என்றால்  சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம்  நுழையக்கூடாது . நுழைந்தால் அதனை தமிழருக்கு தேவையான  ஆயிரம் பிரச்சினைகள்  இருக்கும் அவற்றில்  சிலதையாவது   தீர்க்க பயன்படுத்தவேண்டும் . ஒரு பொதுவான கொளகை அடிப்படையில் பேசி  சில விஷயங்களுக்கு தமிழ் அரசியல் கடசிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் அதனை விடுத்து நாம் சேரமட்டொம் என்று விதண்டாவாத பிடிவாதம் பிடிப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது நடுநிலை என்பதை   வீணான முடிவு என்பதே சரி . ஒரு தீர்மானத்தில் ஒருவருக்கு  111 வாக்குகள் கிடைத்தால் வெறும் 2  வாக்குகளே தீர்மானிக்கலாம் .நடுநிலை வகிக்காமல் 111 ஓடு 2 ம் சேர்ந்தால்  அவரின்  பக்கமே வெற்றி நடுநிலை வகித்தால் மற்றைய அணி 112  பெற்று  வெல்லும்  

ad

ad