ஞாயிறு, செப்டம்பர் 09, 2012


ஈராக்: பிரான்சு தூதரகம் உள்பட 10 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்
ஈராக் நாட்டில் அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மற்றும் சில தீவிரவாத அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்! சிரேஷ்ட உறுப்பினர்களுடன் பேசி முடி
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபையில் யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை தோன்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசே கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

யாழில் சினிமா பாணியில் இரு குழுக்களுக்கிடையே வாள் வெட்டு: ஒருவர் பலி! இருவர் படுகாயம்
யாழ். திருநெல்வேலி சிவன் - அம்மன் ஆலயத்தை அண்டிய மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இரு இளைஞர் குழுக்கள் பரஸ்பரம் வாளால் வெட்டிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெண்ணொருவருடன் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு தருமஅடி: யாழில் சம்பவம்
பெண்ணொருவருடன் தவறான முறையில் நடந்துகொள்ள முயன்ற பொலிஸார் ஒருவர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கிழக்கில் தலையாட்டி பொம்மையாக மாறுவதா? கூட்டமைப்புடன் இணைவதா? முஸ்லீம் காங்கிரஸ் நாளை முடிவு!
கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை ஐ. ம.சு. கூட்டமைப்புக்கு கொடுத்துவிட்டு, தலையாட்டி பொம்மையாக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கப் போகின்றதா? அல்லது காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய மாகாணசபையை அமைப்பதற்கான உரிமையை த. தே. கூட்டமைப்புடன் இணைந்து

தனது மனைவியின் 14 வயது தங்கையை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபரைக் கைதுசெய்ய அதுருகிரிய காவல்துறையினர் தேடுதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.
ஹினிதும பிரதேசத்தில் வசித்துவரும் இந்தச் சிறுமியை, மாலபே பிட்டுகல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வேன் ஒன்றில் வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தபோது அத்துருகிரிய காவல்துறையினர், வேனை முற்றுகையிட்டு சாரதியைக் கைதுசெய்துள்ளனர். அத்துடன், சிறுமியையும் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் விபரம் வருமாறு:


இலங்கை தமிழரசுக் கட்சி

துரைரெட்ணம்-29,141
துரைராஜசிங்கம்-27,717
வெள்ளிமலை-20,200
பிரசன்னா-17,304
நடராசா-16,681
கருணாகரம்-16,536

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு

சந்திரகாந்தன்-22,338
அமீர் அலி-21,271
சிப்லி பாரூக்-20,407
சுபைர்-17,903


 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

நசீர் அஹமட்-11,401
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேர்தல் வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து வருகை தருவதனைப் படங்களில் காணலாம்.

விருப்பு வாக்குகள்: திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை வருமாறு,
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 
ஆரியவதி கலபதி 14,224 
பிரியந்த பத்திரன 12,393 
நஜீப் அப்துல் மஜீட் 11,726

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி, பல்கலைக்கழக மாணவரான ஜஹதீஸன்

மட்டு. தமிழரசுக்கட்சி விருப்பு வாக்கில் ரட்ணம் முதலாம் இடம்! பிள்ளையானும் வெற்றி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களை பெற்றிருக்கின்ற நிலையில் அந்த ஆறு உறுப்பினர்களும் யார் என்பதை அறிந்து கொள்ளும் விருப்பு வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன்படி தமிழரசுக்கட்சி சார்பில் இராசையா துரைரத்தினம், கே.துரைராசசிங்கம், ஞா.கிருஷ்ணபிள்ளை,

மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தல்! தொகுதி ரீதியான முடிவுகள்! ஒரே பார்வையில்....
கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளின்படி தொகுதி ரீதியாக போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குளின் விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு, 19 ஆசனங்கள் தேவைப்படுகின்றது, யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லை
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும், அதன் கூட்டணிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைத்துள்ளது.
ஆட்சியமைக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயார்! சம்பந்தன்
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பிலும் ஆட்சியமைப்பது குறித்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்று முன்னர் தெரிவித்தார்.  
 
அடுத்தகட்ட  நகர்வு குறித்து எமது பிரதிநிதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க வலுவாக உள்ள தரப்பிடமும் தொடர்ந்து பேசி ஒரு முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார். 
 
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. 
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகப் பூர்வ முடிவுகள்

நேற்று நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் உத்தியோகப் பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி த.தே.கூ 11 ஆசனங்களையும் ஐ.ம.சு.மு 14 ஆசனங்களையும், மு.கா 7 ஆசனங்களையும், ஐ.தே.க 4 ஆசனங்களையும் ஏனையவை 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
பிரதான கட்சிகள் பெற்ற வாக்கு விபரங்கள்

இலங்கைத் தமிழரசுக் கட்சி  1 இலட்சத்து 93 ஆயிரத்து 827 (30.59 %) வாக்குகள் பெற்று 11 ஆசனங்களையும்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி   2 இலட்சத்து 44 (31.58 %) வாக்குகள் பெற்று இரண்டு மேலதிக ஆசனங்களுடன் 14 ஆசனங்களையும்,

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்    1 இலட்சத்து 32 ஆயிரத்து 917 (20.98 %) வாக்குகள் பெற்று 7 ஆசனங்களையும்,
   
ஐக்கிய தேசியக் கட்சி     74 ஆயிரத்து 901 (11.82 %) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்,

தேசிய சுதந்திர முன்னணி    9 ஆயிரத்து 522 (1.5 %) வாக்குகள் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளன.
  


கிழக்கு மாகாண சபையின் மாவட்ட ரீதியான வாக்குகள் விபரம் :

மட்டக்களப்பு மாவட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி : 1,04,364 (50.83%)  வாக்குகள்  பெற்று 06 ஆசனங்களையும்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி : 64,190 (31.17%) வாக்குகள் பெற்று 04 ஆசனங்களையும்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் : 23,083 (11.21%) வாக்குகள்  பெற்று 01 ஆசனத்தையும்

சுயேட்சைக் குழு 8  : 5,355 (5.38%) வாக்குகளையும்,  ஐக்கிய தேசியக் கட்சி : 1026 (1.03%) வாக்குகளையும் பெற்றுதிருகோணமலை மாவட்டம்

இலங்கை தமிழரசு கட்சி - 44,396 (29.088%) வாக்குகள் பெற்று 3 ஆசனங்களையும்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 43,324 (28.38%) வாக்குகள்  பெற்று 3 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (17.15%) வாக்குகள் பெற்று 2 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 24,439 (16.01%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும்

தேசிய சுதந்திர முன்னணி - 9,522 (6.24%) வாக்குகள்  பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.அம்பாறை மாவட்டம்

ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணி - 92,530 (33.66%) வாக்குகள்  பெற்று  5 ஆசனங்களையும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (30.43%) வாக்குகள் பெற்று 4 ஆசனங்களையும்

ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (17.47%) வாக்குகள்  பெற்று  3 ஆசனங்களையும்

இலங்கை தமிழரசு கட்சி - 44749 (16.28%) வாக்குகள்  பெற்று  2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.


கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் ஆளும் கட்சிக்கு வாக்களித்ததாலும், பெருந்தொகையான மக்கள் வாக்களிக்காமல் இருந்தாலும் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை கைப்பற்ற முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி 6 ஆசனங்களையும், திருகோணமலையில் 3 ஆசனங்களும் அம்பாறையில் 2 ஆசனங்களுமான 11 ஆசனங்களை பெற்றுள்ளது. தமிழர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தால் மட்டக்களப்பில் இரண்டு ஆசனங்களையும்,
சப்ரகமுவவில் 2  தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கும் சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
திருகோணமலை தேர்தல் தொகுதி : இ.த.க வெற்றி
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 28,067
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,642
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 7,940
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட கல்குடா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,965
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 21,876
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 8,604
ஐக்கிய தேசிய கட்சி - 1,014
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 25,601
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 12,610
இலங்கை தமிழரசுக் கட்சி - 8,767
ஐக்கிய தேசிய கட்சி - 1,174
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட கல்முனை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 22,884
இலங்கை தமிழரசுக் கட்சி - 11,702
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 5,990
ஐக்கிய தேசிய கட்சி - 1,184
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 14,617
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 13,011
ஐக்கிய தேசியக் கட்சி - 12,318
இலங்கை தமிழரசுக் கட்சி - 10,213
கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்ட பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 31,952
இலங்கை தமிழரசுக் கட்சி - 23,385
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 22,179 
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 104,682 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 62,190 (ஆசனங்கள் - 4)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 23,083 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 92,530 (ஆசனங்கள் - 5)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 83,658 (ஆசனங்கள் - 4)
ஐக்கிய தேசியக் கட்சி - 48,028 (ஆசனங்கள் - 3)
இலங்கை தமிழரசுக் கட்சி - 44,749 (ஆசனங்கள் - 2)
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தினையும் கைப்பற்றியுள்ளது.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

இலங்கை தமிழரசுக் கட்சி - 44,396 (ஆசனங்கள் - 3)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 43,324 (ஆசனங்கள் - 3)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 26,176 (ஆசனங்கள் - 2)
தேசிய சுதந்திர முன்னணி - 24,439 (ஆசனங்கள் - 1)
கிழக்கு மாகாண சபை: முழுமையான விபரங்களஅம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 200,044 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தமிழரசுக் கட்சி - 193,827 (11 ஆசனங்கள்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் -  132,917 (7 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி -  74,901 வாக்குகள் (4 ஆசனங்கள்)
தேசிய சுதந்திர முன்னணி - 9,522 வாக்குகள் (1 ஆசனம்)

சப்ரகமுவ மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர்.
இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 488714 வாக்குகள் (28 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி 286857 வாக்குகள் (14 ஆசனங்கள்)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25985 வாக்குகள் ( 2 ஆசனங்கள்)
சப்ரகமுவ மாகாணம் கேகாலை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 213,734 (ஆசனங்கள் - 11)
ஐக்கிய தேசிய கட்சி - 130,417 (ஆசனங்கள் - 6)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 8,971 (ஆசனங்கள் - 1)

வடமத்திய மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 234387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 126184 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.

பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 104165 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைத் தனதாக்கிக் கொண்டது. ஐக்கிய தேசியக் கட்சி 69943 வாக்குகளுடன் 4 ஆசனங்களைப் பெற்றுள்ளது.

இதன்பிரகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 19 ஆசனங்களும் 2 போனஸ் ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 11 ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு 1 ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.
வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 20,396
ஐக்கிய தேசிய கட்சி - 10,046
மக்கள் விடுதலை முன்னணி - 1,024
பொலனறுவை மாவட்ட தேர்தல் முடிவுகள் : ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களுடன் வெற்றி
வடமத்திய மாகாண பொலனறுவை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஐ.ம.சு.கூ. 6 ஆசனங்களையும் ஐ.தே.க 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி o  ஆசனங்கள். வடமத்திய மாகாண பொலனறுவை மாவட்ட ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் முடிவுகள் வெளியாகியுள்ளன. .
கட்சிகள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 104,165 (ஆசனங்கள் - 6)
ஐக்கிய தேசிய கட்சி - 69,943 (ஆசனங்கள் - 4)
மக்கள் விடுதலை முன்னணி - 4382 (ஆசனங்கள் - 0)
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட பலாங்கொடை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 39286
ஐக்கிய தேசிய கட்சி 15993
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2239

மட்டக்களப்பு மாவட்ட முடிவுகள் உத்தியோக பூர்வமானவை தற்பொழுதுவெளியிடப்பட்டுள்ளது
வாக்கெண்ணும் நிலையம் 12 (செங்கலடி / ஏறாவூர்)
TNA: 3,527
PA: 1,730
SLMC: 1,305
UNP: 08
Ind Grp 08 (PMGG): 02
வாக்கெண்ணும் நிலையம் 34 – பட்டிருப்பு
TNA: 3,740
PA: 1,717
UNP: 88
SLMC: 40
வாக்கெண்ணும் நிலையம் – 38 (மட்டக்களப்பு)
TNA: 3,832
PA: 929
UNP: 18
SLMC: 12
மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது -  2ஆவது வாக்கெண்ணும் நிலையங்களில் இருந்து கிடைத்த தேர்தல்முடிவுகள் -
மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 727
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 340
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 139
ஐக்கிய தேசிய கட்சி- 14
சுயேட்சைக் குழு 8- 70
மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 935
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 305
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 74
ஐக்கிய தேசிய கட்சி- 16
சுயேட்சைக் குழு 8- 11
வடமத்திய மாகாணம் பொலநறுவை மாவட்ட பொலநறுவை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 48222
ஐக்கிய தேசிய கட்சி 33800
ஜே.வி.பி. 1418

கனேடிய தமிழீழ சுற்றுக்கிண்ணம் – உதைபந்தாட்ட போட்டி.(படங்கள்)

 
செப்டம்பர்   மாதம் முதலாம் திகதி, (01 – 09 – 2012 ) L’Amoreaux  விளையாட்டு மைதானத்தில்  வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8:00  மணிக்கு தமிழீழ மற்றும் கனேடிய தேசியக்கொடிகள் ஏற்றப்பட, அமைதி வணக்கத்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வு  மாலை பரிசளிப்பு விழாவுடன் முடிவடைந்தது. அதில் பங்குபற்றிய இளையோர்கள் தமது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி

நடைபெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் வெளியாகிய முடிவுகளின் அடிப்படையில் கிழக்கில் மட்டக்களப்பில் இருந்து வெளியாகிய முடிவுகளில் கூட்டமைப்பு முன்னிலை பெற்றிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டம் 1ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்துகிடைத்த தேர்தல் முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 935
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 305
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 74
ஐக்கிய தேசிய கட்சி- 16
சுயேட்சைக் குழு 8- 11
மட்டக்களப்பு மாவட்டம் 2ஆவது வாக்கெண்ணும் நிலையத்திலிருந்து கிடைத்த தேர்தல்முடிவுகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு- 727ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி- 340ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்- 139ஐக்கிய தேசிய கட்சி- 14சுயேட்சைக் குழு 8- 70
வடமத்திய மாகாணம் பொலநறுவை மாவட்ட பொலநறுவை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 48222
ஐக்கிய தேசிய கட்சி 33800
ஜே.வி.பி. 1418

அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் எதிர்ப்புக்களையும் மீறி ஈரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இந்தப் பயணத்தின் போது அதே எதிர்ப்புக்களை மீறி அங்கு வருகைதரும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப்பேச மகிந்த முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன.
சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட இறக்குவானை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31775
ஐக்கிய தேசிய கட்சி 22520
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2216
மக்கள் விடுதலை முன்னணி 610

வடமத்திய மாகாண பொலனறுவ மாவட்ட மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 25,770
ஐக்கிய தேசிய கட்சி - 14,138
மக்கள் விடுதலை முன்னணி - 1,847
 
வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட மெதவாச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 27288
ஐக்கிய தேசிய கட்சி 11856
ஜே.வி.பி. 1661

வடமத்திய மாகாண அநுராதபுர மாவட்ட அநுராதபுரம்-மேற்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 31,520
ஐக்கிய தேசிய கட்சி - 19,624
மக்கள் விடுதலை முன்னணி - 1,429