9 செப்., 2012


திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி, பல்கலைக்கழக மாணவரான ஜஹதீஸன்
ஜனார்த்தனன் மற்றும் குமார்சுவாமி நாகேஸ்வரன் ஆகியோர் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன, முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரம்ழான் அன்வர் மற்றும் ஹசன் மௌலவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிண்ணியாவை சேர்ந்த இம்ரான் மஹ்ரூப், அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.