புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012


திருகோணமலையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னணி - குறித்த தேர்தலில் 108 உறுப்பினர்கள் தெரிவாகுவதற்காக 3ஆயிரத்து 73 பேர் போட்டி
திருகோணமலை மாவட்டத்தில் முதற்கொண்டு கிடைத்த தேர்தல் பெறுபேறுகளின் அடிப்படையில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு முன்னிலை.
திருகோணமலை தேர்தல் தொகுதி
த.தே.கூ -28070
மு.கா - 8633
ஐ.தே.க - 2980
ஐ.ம.சு.கூ - 7923
மூதூர் தேர்தல் தொகுதி
த.தே.கூ - 4049
ஐ.ம.சு.கூ - 458
மு.கா - 300
ஐ.தே.க -81
தபால் மூல வாக்குகள்....
நடைபெற்று முடிந்த மாகாணசபை தேர்தல்களில் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 6549
ஐக்கிய தேசியக் கட்சி - 2845
மக்கள் விடுதலை முன்னணி - 298
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் - 103.
வட மத்திய மாகாண சபையின் பொலன்னறுவை மாவட்ட தபால்மூல வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 4532
ஐக்கிய தேசியக் கட்சி - 2835
மக்கள் விடுதலை முன்னணி - 254
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் சிறுசிறு வன்முறைச் சம்பவங்களுடன் சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது.
குறித்த தேர்தலில் 108 உறுப்பினர்கள் தெரிவாகுவதற்காக 3ஆயிரத்து 73 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 11 ஆசனங்களும், அம்பாறையில் 14 ஆசனங்களும், திருகோணமலையில் 10 ஆசனங்கள் என 35 ஆசனங்களுக்கான போட்டியும்
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் 21 ஆசனங்களும், பொலநறுவையில் 10 ஆசனங்களுமாக 31 ஆசனங்களுக்கான போட்டியும்
சப்பிரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரியில் 24 ஆசனங்களும் , கேகாலையில் 18 ஆசனங்களுமாக 42 ஆசனங்களுக்கான போட்டியும் நடைபெற்றுள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
எனினும் குறித்த வாக்குப் பதிவுகள் கணக்கெடுப்பிற்காக 236 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad