9 செப்., 2012
 காஜல் அகர்வால் கால்ஷீட் பிரச்னையால் விஜய் நடிக்கும் படத்தின் வெளிநாடு ஷூட்டிங் ரத்தானது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடிக்கும் படம் ‘துப்பாக்கி.
இப்படத்திற்கு 2 பாடல் காட்சிகள் சுவிட்சர்லாந்து நாட்டில் ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அது திடீரென்று ரத்து செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி என
3 மொழி படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இதனால் அவர் 3 நாட்கள் மட்டுமே சுவிட்சர்லாந்து ஷூட்டிங்கிற்கு வர முடியும் என்று கூறிவிட்டார். ஆனால் அதுபோதுமான நாட்களாக இல்லை. கூடுதல் நாட்கள் தேவை என்றார் முருகதாஸ். ஆனால் காஜல் மறுத்துவிட்டார்.
மேலும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் பிரியதர்ஷன் இயக்கும் நாடோடிகள் படத்திலும் பணியாற்றுவதால் வெளிநாடு வர இயலாது என்று கூறிவிட்டார். அவருக்கு பதிலாக பாடல் காட்சிக்கு மட்டும் வேறு ஒளிப்பதிவாளரை தேட வேண்டி இருந்தது.
இப்பிரச்னைகளால் சுவிட்சர்லாந்து ஷூட்டிங்கை ரத்து செய்த முருகதாஸ், 2 பாடல் காட்சிகளையும் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்க முடிவு செய்தார். காஜல் அகர்வாலுடன் லவ் டூயட் மற்றும் விஜய் அறிமுக பாடல் என 2 பாடல்கள் மும்பையிலே படமாக்கப்படுகிறது.