புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012



 
கிழக்கில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில்! - பொலனறுவைய. இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு.கூ. முன்னணியில்!
நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3240 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு 1448, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 463 வாக்குகளையும், சுயேட்சைக்குழு 08 – 170 வாக்குகளையும் பெற்றுள்ளது.
தபால் மூல வாக்கெடுப்பு : பொலனறுவையில் ஐ.ம.சு.கூ வெற்றி
வடமத்திய மாகாணம் பொலனறுவை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 4532
ஐக்கிய தேசிய கட்சி - 2835
மக்கள் விடுதலை முன்னணி - 254
சப்பரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை,
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6549
ஐக்கிய தேசிய கட்சி 2245
மக்கள் விடுதலை முன்னணி 298
அனுராதபுரம் கிழக்குக்கான வாக்களிப்பு முடிவுகள்
அனுராதபுர மாவட்டத்தின் அனுராதபுரம் கிழக்குக்கான வாக்களிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐ.ம.சு மு. - 31199
ஐ.தே.க. - 18726
ம.வி.மு - 2759

ad

ad