புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 செப்., 2012


மட்டு. மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வெற்றி உறுதி. திருமலை தொகுதியில் முன்னணியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா ஆகிய மூன்று தொகுதிகளிலும் தமிழரசுக்கட்சி முன்னணியில் உள்ளது. இம்மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை. இதேவேளை ஐக்கிய தேசியக்கட்சியை விட காத்தான்குடியை தளமாக கொண்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை சேர்ந்த சுயேச்சை குழு முன்னணியில் உள்ளது.
 திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தொகுதியில் தமிழரசுக்கட்சி முன்னணியில் உள்ளது. சேருவில, மூதூர் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்னணியில் உள்ளது. எனவே திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கும் இடையில் தான் கடும் போட்டி நிலவுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரி, மெதடிஸ்த மத்தியகல்லூரி ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகள் தற்போது எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திணைக்களம் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடாத போதிலும் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமற்ற வகையில் எமக்கு கிடைத்த முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி 3,238
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 1,428
முஸ்லிம் காங்கிரஸ் 459
சுயோட்சைக்குழு 08 (நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ) 170
ஐக்கிய தேசியக் கட்சி 63

ad

ad