புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014


‘பார்முலா1’ கார் பந்தயத்தின் முதல் சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரீ போட்டியில் ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் முதலிடம் பிடித்தார்.
முதல் சுற்று பந்தயம்
கார் பந்தயங்களில் மிகவும் பிரபலமான ‘பார்முலா1’ கார்பந்தயம் இந்த ஆண்டில் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

இந்த சீசனின் முதல் சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரீ போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று நடந்தது. 307.574 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயம் 57 சுற்றுகளை கொண்டதாகும். இதில் 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் களம் கண்டு மின்னல் வேகத்தில் காரை இயக்கினர்.
ஜெர்மனி வீரர் வெற்றி
இதில் 3–வது வரிசையில் இருந்து புறப்பட்ட ஜெர்மனி வீரர் நிகோ ராஸ்பெர்க் (மெர்சிடஸ் அணி) பந்தய தூரத்தை 1 மணி 32 நிமிடம் 58.710 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்தார். பார்முலா 1 பந்தயத்தில் ராஸ்பெர்க் பெற்ற 4–வது வெற்றி இதுவாகும்.
அவரை விட 26.7 வினாடி பின்தங்கிய டென்மார்க்கை சேர்ந்த அறிமுக வீரர் கெவின் மாக்னுசென் (மெக்லரன் அணி) 2–வது இடமும், இங்கிலாந்தின் ஜென்சன் பட்டன் (மெக்லரன் அணி) 3–வது இடமும் பெற்றனர்.
ரெட்புல் அணி வீரர் ஆஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சர்யர்டோ தான் முதலில் 2–வதாக வந்தார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்டதை விட அதிக எரிபொருளை வைத்திருந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வெட்டல் வெளியேற்றம்
கடந்த 4 ஆண்டுகளாக (2010, 2011, 2012, 2013) சாம்பியன் பட்டம் வென்றவரும், கடந்த ஆண்டில் தொடர்ந்து 9 பந்தயங்களில் வெற்றிக்கொடி நாட்டியவருமான ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் (ரெட்புல்) பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தார். கார் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் 3–வது சுற்றுடன் விலகினார். இதேபோல் முதல் வரிசையில் இருந்து காரை செலுத்திய முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டனும் (மெர்சிடஸ்) என்ஜின் கோளாறு காரணமாக பாதியிலேயே விலக நேரிட்டது.இந்திய தொழில் அதிபருக்கு சொந்தமான ஸ்போர்ஸ் இந்தியா அணியை சேர்ந்த நிகோ ஹல்கென்பர்க் (ஜெர்மனி) 7–வது இடமும், செர்ஜி பெரெஸ் (மெக்சிகோ) 11–வது இடமும் பெற்றனர்.
இந்த போட்டி தொடரின் 2–வது பந்தயமான மலேசியன் கிராண்பிரீ வருகிற 30–ந் தேதி நடக்கிறது.

ad

ad