திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான குமாருக்கு வாக்கு சேகரிக்க கந்தர்வக்கோட்டை தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் அமைச்சர் விஜய பாஸ்கர். கறம்பக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மாங்கோட்டை பகுதியில் பிரசாரம் முடித்து வந்திருக்கிறார்கள்.
வரும் வழியில் ரோட்டிலேயே ஒரு பெண் இன்னொரு பெண்ணின் தோளில் சாய்ந்தபடி நின்றிருக்கிறார். அப்போது வாகனத்தை நிறுத்திய அமைச்சர் விஜயபாஸ்கரும், வேட்பாளர் குமாரும் ஏன் இப்படி நிற்கிறீர்கள்? என விசாரித்திருக்கிறார்கள்.
இவர் பெயர் சாந்தி, முழுமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி வந்துவிட்டது. வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை. அதனால் மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன். இப்போது மயக்கம் வந்துவிட்டது என உடன் இருந்த பெண் கூறியிருக்கிறார். உடனே அமைச்சரும், வேட்பாளர் குமாரும் தாங்கள் வந்த வாகனத்தில் அவர்களை மழையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவமனைக்கு சென்றவுடன் அந்த பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதையடுத்து, அமைச்சர் விஜய பாஸ்கரும், வேட்பாளர் குமாரும் மருத்துவமனைக்கு வந்து, தாய் மற்றும் குழந்தையின் நலனை விசாரித்துவிட்டு மீண்டும் பிரசாரத்திற்கு சென்றிருக்கிறார்கள்