புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கடலூர்: நெய்வேலி அனல் மின் நிலையமான என்.எல்.சி.யில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பலியானதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது
இதனையடுத்து கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது.
என்.எல்.சி. நிறுவனத்தில் ராஜா என்ற தொழிலாளி முதலாம் மின்நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
அவர் இன்று இரண்டாவது சுரங்கத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ராஜாவை தடுத்திருக்கிறார்.
இதையடுத்து, ராஜாவுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில், தொழில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் ராஜாவை சுட்டிருக்கிறார்.
இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ராஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மற்ற தொழிலாளருகளும், அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து என்.எல்.சி.யை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை கைது செய்ய வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள், உயிரிழந்த தொழிலாளியின் சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, இருதரப்பிலும் கல்வீச்சு நிகழ்ந்தது.
இதனைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுப்படுத்த 3 முறை கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
தொழில் பாதுகாப்பு படை வீரர் கைது
மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் நோமனை போலீசார் கைது செய்தனர். தற்போது நோமனை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ad

ad