புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர் 
யாழ். கரையோரப் பிரதேசங்களில் கல்வி கற்று வேலை வாய்ப்பற்றிருக்கும் இளையோரை இராணுவத்தில் இணைப்பதற்கான முயற்சிகளில் படைத்தரப்பினர் ஈடுபட்டுவருகின்றனர்
என்று கரையோரப் பகுதி மக்கள் குற்றஞ்
சாட்டுகின்றனர்.கொழும்புத்துறை, மணியந்தோட்டம், குருநகர், பாஷையூர், நாவாந்துறை ஆகிய பகுதிகளில் க.பொ.த.(சா.த.) பரீட்சை எழுதிவிட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களை குறிவைத்து அவர்களது வீடுகளுக்குச் செல்லும் படையினர் அவர்களை இராணுவத்தில் இணையுமாறும் இதனால் பலநன்மைகள் கிடைக்கும் எனவும் ஆசை காட்டி வருகின்றனர் என்று இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
  
இராணுவத்தில் இணைந்தால் அதிக சம்பளம் பெறலாம். வீட்டின் கஷ்டங்கள் தீரும். உங்களை இராணுவத்தின் சிவில் விடயங்களைக் கவனிக்கக் கூடியவர்களாக உருவாக்குவோம் என்று இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை கூறி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஆசைகாட்டி இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை சம்மதிக்க வைத்த பின்னர், அவர்களை அழைத்துச் சென்று அவர்கள் கல்வி கற்ற பாடசாலைக்கு நேரில் செல்லும் இராணுவத்தினர் இளைஞர்களின் விடுகைப் பத்திரம் உள்ளிட்ட ஏனைய சான்றிதழ்களை வழங்குமாறு அதிபர்களிடம் கோரிவருகின்றனர் என்றும் பெற்றோர் கூறுகின்றனர்.

ad

ad