புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கிரிமியா வாக்கெடுப்பு: 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம்

உக்ரெயின் நாட்டின் பகுதியான கிரிமியாவை ரஷ்யாவின் இணைப்பது குறித்து நேற்று பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 95 சதவீதம் பேர் ரஷ்யாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் 1954ல் அப்போதைய சோவியத் குடியரசான ரஷ்யாவுட இணைந்திருந்த கிரிமியா மீண்டும் இப்போது ரஷ்யாவுடன் இணையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மொத்தமுள்ள 15 லட்சம் வாக்காளர்களில் 83 சதவிகிதத்தினர் வாக்களித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 95 சதவிகிதம் பேர் ரஷ்யாவுடன் இணையும் முடிவை ஆதரித்தும், 5 சதவிகிதம் பேர் எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். மேலும் இந்த வாக்கெடுப்பு நடத்த பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில்
கிரிமியா குறித்த வாக்கெடுப்பு, சட்டப்பூர்வமானது என்றும், சர்வதேச விதிகளுக்கு உட்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். எனினும், தனது முடிவில் ரஷ்யா உறுதியாக இருக்குமானால், அதன் மீது பொருளாதார தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ad

ad