புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொலை : நெய்வேலியில் பதற்றம் - கல்வீச்சு-திருமா வை கோ கண்டனம் 
என்.எல்.சியில் தொழிலகப் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி ஒருவர் பலியானார். சி.ஐ.எஸ்.எப் வீரர் சுட்டதில் ஒப்பந்த தொழிலாளி சுரேஷ் என்பவர் பலியானார். 


என்.எல்.சி-யின் முதலாவது மின்நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சுரேஷ். 2வது சுரங்கத்துக்கு சுரேஷ் செல்ல முயன்ற போது சி.ஐ.எஸ்.எப் வீரர் மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து வீரருக்கும் தொழிலாளி க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து சி.ஐ.எஸ்.எப் வீரர் துப்பாக்கியால் சுரேஷை சுட்டுள்ளார். இதனால் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
சி.ஐ.எஸ்.எப் துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளி உயிரிழந்ததை அடுத்து நெய்வேலியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. என்.எல்.சி ஆலை முன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு கல்வீச்சு நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் மீது மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். சி.ஐ.எஸ்.எப் பொதுமக்கள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி பலி! : வைகோ கண்டனம்

நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 அவ்வறிக்கையில்,’’ நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இரண்டாம் சுரங்கத்திற்குச் சென்ற அஜீÞ நகரைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி 28 வயது இளைஞர் ராஜா என்பவரை இரண்டாம் சுரங்க நுழைவாயிலில் காவல் பணியில் இருந்த மத்திய துணைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதனால், அந்தத் தொழிலாளி தலை சிதறி கோரமான முறையில் அதே இடத்தில் உயிரிழந்தார்.
என்.எல்.சி. சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் தொழிலகங்கள் பாதுகாப்புக்காக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, என்.எல்.சி. தொழிலாளர்களுடன் மோதல் சம்பவங்களும், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.
மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. இனி இதுபோன்ற கோர சம்பவங்கள் நடக்காமல், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனைவி மற்றும் இரு குழந்தைகளை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துவிட்டு உயிர் பலியான ராஜா குடும்பத்துக்கு ரூபாய் 10 இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொள்கிறேன்
த்திய தொழில் பாதுகாப்புப் படை வெறிச்செயல்!
 நெய்வேலி நிலக்கரி நிறுவனத் தொழிலாளி படுகொலை! :
 திருமாவளவன் கண்டனம்


நெய்வேலியில் ஒப்பந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 அவ்வறிக்கையில்,’’நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரியும் அஜீஸ் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 35) என்பவர் இன்று காலை நெய்வேலி இரண்டாம் சுரங்க நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.
 தொழிலாளர் முன்னேற்ற சங்கத் துணைத் தலைவர் பரமசிவம் தலையில் படுகாயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சீனிவாசன் என்ற பத்திரிகையாளரும் படுகாய மடைந்துள்ளார். மனிதத் தன்மையற்ற முறையில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தொழிலாளி ராஜ்குமார் தலையில் சுட்டுப் படுகொலை செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.  படுகொலை செய்யப்பட்ட ராஜ்குமார் அங்கு ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.  அவர் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக உள்ளார்.  தனது நண்பரைப் பார்ப்பதற்காக இரண்டாவது சுரங்க நுழைவாயில் அருகே காத்திருந்தபோதுதான் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.
 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி தொழிலாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனவே அவர்களை என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து அகற்ற வேண்டும். நிறுவனத்தின் பாதுகாப்புக்கென அந்த நிறுவனமே ஒரு தனி பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.
படுகொலை செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு அமலா லூசியாபால் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.  அதில் ஒரு குழந்தை பிறந்து எட்டு மாதமே ஆகிறது.  ராஜ்குமாரை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ராஜ்குமாரின் மனைவிக்கு அந்நிறுவனத்திலேயே வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad