புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

 நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை 
என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக

ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு எதுவும் இல்லை என்று கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களே நீதியை கேட்க வேண்டும். அதன் காரணமாகவே சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகிறோம். எல்லா கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பாத போதிலும், கோரிக்கைகளை முன்வைத்து முயற்சிப்பது முக்கியமானது. அமெரிக்க ஆதரவு தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தீர்மானங்களைப் போன்றே இந்த தீர்மானத்திலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
  
வடக்கில் இராணுவ பிரசன்னம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்த போதிலும், வடக்கிற்கு விஜயம் செய்யும் அனைவருக்கும் வடக்கின் படையினர் பிரசன்னத்தை பார்க்க முடியும். வடக்கு நிலைமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகைப்படுத்தி வெளியிட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. சர்வதேச சமூகத்தின் கோரிக்கைளை அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனம் செய்தால், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad