புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

8 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல்?
பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க.–14, பா.ஜ.க.–8, பா.ம.க.–8, ம.தி.மு.க–7, கொங்கு நாடு கட்சி–1, இந்திய ஜனநாயக கட்சி–1 என்ற ரீதியில் 39 தொகுதிகளிலும் பங்கீடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரி தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜ.க. விட்டுக் கொடுத்துள்ளது.


பா.ஜ.க. கூட்டணியில் 90 சதவீத தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு விட்டதால், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தே.மு.தி.க., பா.ஜ.க., ம.தி.மு.க. கட்சிகள் தேர்வு செய்து விட்டன. பா.ஜ.க.வை பொருத்தவரை கன்னியாகுமரி, தென்காசி (தனி), ராமநாதபுரம், சிவகங்கை, கோவை, திருப்பூர், ஸ்ரீபெரும் புதூர், தென் சென்னை ஆகிய 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த 8 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ.க.வில் ஏற்கனவே தேர்வு செய்து விட்டனர். அந்த வேட்பாளர்கள் விவரம் :
1. தென்சென்னை – இல.கணேசன்
2. கன்னியாகுமரி – பொன்.ராதாகிருஷ்ணன்
3. தென்காசி – அய்யாவழி போதகர் சிவச்சந்திரன்
4. ராமநாதபுரம் – கருப்பு முருகானந்தம்
5. சிவகங்கை – எச். ராஜா
6. திருப்பூர் – ஜி.கே.செல்வக்குமார்
7. கோவை – வானதி சீனிவாசன்
8. ஸ்ரீபெரும்புதூர்– டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. கூட்டணி விரும்பும் இந்த 8 தொகுதிகளில் திருப்பூர் மாறலாம் என்று கூறப்படுகிறது. இன்று அல்லது நாளை இதில் முடிவு எட்டப்பட்டு விடும்.
பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நாளை அல்லது நாளை மறுநாள் சென்னை வர உள்ளார். அவர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று தெரிகிறது.

ad

ad