புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

காணமல் போன விமானம்-ஒரு பார்வை 
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக், மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மலேசிய விமானம் கிழக்கு கடற்கரை பகுதியை அடைவதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னரே அதன் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.
விமானத்தை தேடும் பணியில் 14 நாடுகளைச் சேர்ந்த 42 விமானம், 39 கப்பல்கள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமானதும் முதலில் தென் சீன கடல் பகுதியில் தேடினோம். அந்த தேடுதல் பணியை முடித்துக் கொள்வதாக இருக்கிறோம்.
விமானம் அதன் பாதையில் இருந்து ஏன் விலகிச் சென்றது என்பதை இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.
செயற்கோள் தகவலகள், விமானம் வடக்கு தாய்லாந்தில் இருந்து கஸகஸ்தான் பகுதி அல்லது இந்தோனேசியாவில் இருந்து இந்தியப் பெருங்கடல் தெற்கு பகுதிகளுக்கு இடையே ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம் என தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் தேடுதல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஊடகங்களில், மலேசிய விமானம் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானாலும் மற்ற சாத்தியக்கூறுகள் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------
மாயமான விமானம்!..தொடரும் மர்மங்கள்!..

மாயம்?
முதலில் விமானம் கடலில் மூழ்கி அனைவரும் பலியாகி இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது.
மேலும் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 4 பேர் பயணித்ததால், தீவிரவாதிகளின் சதிச்செயலா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்கா, சீனா, மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 9 நாடுகள், விமானத்தை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
போர்க் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் விமானத்தை தேடி வருகின்றனர்.

விமானத்தின் கதவு
இதற்கிடையே ரேடாரில் பதிவான தகவல்களை ஆய்வு செய்த போது, விமானத்தின் கதவு போன்ற உதிரி பாகம் ஒன்று பதிவாகியுள்ளது தெரியவந்தது.
ஆனால் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று பார்த்த போது, விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், வியட்நாம் வான் வெளியில் பறந்து கொண்டிருந்த விமானம் திரும்பி சென்றது ரேடாரில் பதிவாகி உள்ளதால் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த அலி?
இந்நிலையில் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணித்த 2 நபர்கள் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணியின் பெயர் மிர் அலி என்பதும், டிராவல் ஏஜெண்ட் வாயிலாக அவர் டிக்கெட் வாங்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் உள்ள டிராவல் ஏஜெண்ட் பெண்ணை தொடர்பு கொண்டு மிர் அலி டிக்கெட் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அந்த பெண் மட்டுமே மிர் அலியை தெரிந்திருப்பார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மலாக்கா ஜலசந்தியில் மலேசிய விமானம்?
இந்நிலையில் மலாக்கா ஜலசந்தி அருகே விமானம் பயணித்துள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு இடையிலான மலாக்கா ஜலசந்தி அருகே இறுதியில் விமானம் ரேடார் தொடர்பை இழந்ததுள்ளது என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து மலேசியாவின் மேற்கு கடற்பகுதிக்கும் தேடுதல் வேட்டை பரப்பளவு விஸ்தரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.
உண்மையை சொல்லுங்கள்
இந்நிலையில் விமானம் மாயமானது குறித்து உண்மையான தகவல்களை தெரிவியுங்கள் என்று விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவர்கள், பீஜிங்கில் மலேசிய மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு தங்களது கோபத்தை வெளிபடுத்தியுள்ளனர்.
பீஜிங்கில் ஓட்டல் ஒன்றில் மலேசியன் ஏர்லைன்ஸ் அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்களை சந்தித்து பேசிய போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

விமானி குறித்து இளம்பெண் பரபரப்பு தகவல்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜோந்தி ரோஸ் என்ற இளம் பெண் மாயமான மலேசிய விமானத்தை ஓட்டி சென்ற விமானி அப்துல் ஹமீது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
கடந்த 2011ம் ஆண்டு என்னை விமானத்தில் பைலெட்கள் அறைக்கு அழைத்து சென்றார் என்றும், விமானத்தை முழுவதையும் சுற்றிக் காட்டிவிட்டு மிகவும் ஜாலியாக பேசினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நானும் எனது தோழி ஜான் மாரியும் பூகெட்டில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்திற்கு காத்திருந்த போது இச்சம்பவம் நடந்தது எனவும் குறிப்பிட்டார்.

'ஆல் ரைட், குட் நைட்' பைலெட்டின் இறுதி தகவல்
இந்நிலையில் மாயமான விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டுக்கு அறையுடன் தொடர்பில் இருந்த பைலெட் இறுதியாக 'ஆல் ரைட், குட் நைட்' என்று கூறியுள்ளார்.
விமானம் ரேடார் தொடர்பை இழந்ததற்கு முன்னர் விமானத்தில் இருந்து கடைசியாக கிடைத்த தகவல் இது தான் என்று கோலால்பூர் விமான கட்டுபாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விமானியின் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவின் செயற்கைகோள் படங்கள்
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீனா செயற்கைக்கோள் ஒன்று வியட்நாமின் தென்முனையில் கடற்பகுதியில் மிதக்கும் பொருட்கள் கிடந்ததை கண்டுபிடித்துள்ளது என்று அந்நாட்டு அரசு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாயமான விமானத்தில் உடைந்த பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் விமானத்தின் உடைந்த பொருள்தான என்று உறுதி செய்யப்படவில்லை.
படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகம் இல்லை என்று வியட்நாம் மற்றும் மலேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மணிநேரம்
மாயமான மலேசிய விமானம் ரேடார் தொடர்பை இழந்த பின்னும் நான்கு மணி நேரங்கள் தாழ்வானபகுதியில் வானில் பறந்துள்ளது என்று அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்று அந்நாட்டு வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
விமான கன்ட்ரோல் அறைக்கு தன்னிச்சையாக தகவல்களை அனுப்பும் விமானத்தின் கருவியின் தகவல்களை கொண்டு இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் விமானம் கடத்தி மறைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தேடுதல் வேட்டையில் சூனியக்காரர்
மலேசியா, விமானத்தை கண்டுபிடிக்க பிரபல சூனியக்காரரான இப்ராஹிம் மத் ஜின் என்பவரின் உதவியை நாடியுள்ளது.
அந்த நபர் விமானம் கிளம்பிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் பூஜை நடத்தியுள்ளார்.
அவரை இந்த பூஜையை செய்ய நாட்டின் முக்கிய தலைவர்கள் தான் அழைத்ததாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் ஒரு கையில் மீன் வலையையும், மறுகையில் மூங்கில் பைனாகுலரையும் வைத்து விமானத்தை தேடியுள்ளார்.
விமானம் பற்றி அந்த சூனியக்காரர் கூறுகையில், விமானம் தற்போதும் பறந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், இல்லை என்றால் கடலில் விழுந்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து, சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 7ம் திகதி நள்ளிரவு 12.41 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸூக்குச் சொந்தமான போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்த MH-370-என்ற விமானம் புறப்பட்டு சென்றது.
2 மணிநேரத்துக்குள்ளேயே தென் சீனக் கடல் பகுதியில் திடீரென காணாமல் போனது.
இந்த விமானத்தில் 227 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 239 பேர் பயணம் செய்தனர்.
செயற்கைகோள் படங்களா? மலேசியா நிராகரிப்பு
காணாமல் போன மலேசிய விமானத்தின் சிதைவுகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா மூன்று புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
அத்துடன், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த பின்னரும் விமானம் நான்கு மணித்தியாலங்கள் பறந்ததாகத் தெரிகிறதென அமெரிக்க பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இவையிரண்டும் தவறானவையென மலேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹிஷாமுதீன் ஹூசைன் தெரிவித்தார்.
சீனா தவறுதலாக படங்களை வெளியிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டார். விமானத்தின் எஞ்சினை உற்பத்தி செய்த ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டபோது, அமெரிக்காவின் தகவல் தவறானதென தெரியவந்ததாக அவர் கூறினார்.
இந்திய பெருங்கடலுக்கு மாற்றம்
இந்நிலையில் மலேசிய விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலின் அடியில் விமானம் இருக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ராணுவம் மற்றும் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததன் அடிப்படையில் தேடுதல் எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்தமான் பகுதிக்கு சென்றதா?
அமெரிக்கா அந்தமான் கடல் பகுதிக்கு கப்பலை அனுப்பியுள்ளது.
கடற்படையின் நெடுந்தொலைவு ரேடார் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் உள்ள பி-3சி ஓரியன் கண்காணிப்பு விமானம் மூலம் அமெரிக்கா அந்தமான் கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியினை தொடங்கவுள்ளது.

ad

ad