வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் பங்கேற்க பங்களாதேஷ் பயணம்
கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட புதிய நிபந்தனைகளுடனான வீரர் கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வீரர்கள் மறுத்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். இதில் சர்வதேச கிரிக்கெட் கவுன் ஸிலிடம் (ஐ.சி.சி.) இருந்து கிடைக் கப்பெறும் நிதியில் அணி வீரர்கள் 20 வீத பங்கை கோருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை வீரர்கள் கிரிக்கெட் சபை யுடன் நேற்று முன்தினம் பேச்சு வார்த்தை நடத்தியபோதும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்நிலை யிலேயே இலங்கை அணி ஒப்பந் தத்தில் கைச்சாத்திடாமலேயே பங்களாதேஷ் சென்றுள்ளது. முன்ன தாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திடா மல் இருந்தால் இருபது-20 உலகக் கிண்ணத்திற்கு தேர்வு செய்யப்பட் டிருக்கும் அணிக்கு பதில் மாற்று அணியை அனுப்புவதாக இலங்கை கிரிக்கெட் எச்சரித்திருந்தபோதும் பின்னர் அந்த நிலைப்பாட்டில் தளர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டும் வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடு வதில் ஏற்பட்ட இழுபறி காரணமாக அந்த ஆண்டின் ஒப்பந்தத்தில் வீரர் கள் ஜ_லை நடுப்பகுதியிலேயே கைச்சாத்திட்டனர்.
இதனால் கையொப்பம் இடும்வரை வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சபையால் வழங் கப்படவில்லை.
இந்நிலையில் வீரர்கள் தமது கோரிக்கையையும் தற்போது குறைத்துக்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் தொட ருக்கான கட்டணத்தில் 12 வீதத்தை வீரர்கள் கோருகின்றனர். இருபது-20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ப தற்காக ஐ.சி.சியிடம் இருந்து இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏறத்;தாழ 8.9 மில்லியன் டொலர் கிடைக் கிறது. இதில் அணியினருக்கு கோரிக்கையின்படி 1.07 மில்லியன் டொலர் கிடைக்கும். இது இலங்கை கிரிக்கெட் உறுதி அளித்திருக்கும் தொகையில் 570,000 டொலர்கள் பற்றாக்குறையாகும்.
ஏற்கனவே ஐ.சி.சி. கொடுப்பன வுகள் மற்றும் சர்வதேச தொடர் களில் தம்மை பயன்படுத்தியதற்காக கிடைக்க வேண்டிய கொடுப்பனவு தொகைகளில் இன்னும் நிலுவை இருக்கும் நிலையிலேயே இலங்கை வீரர்கள் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
ஐ.சி.சி. தொடர்களில் பங்கேற்ப தற்கான கொடுப்பனவுகள் கடந்த 2003 இல் இருந்து 2012 வரை இலங்கை அணியினருக்கு வழங் கப்படவில்லை. கடந்த ஆண்டு வீரர்கள் ஒப்பந்தத்தின்போது அது குறித்து வீரர்கள் எதிர்ப்பை வெளி யிட்டனர். 2011 ஆம் ஆண்டு உல கக் கிண்ணத்திற்காக புதிதாக இரு மைதானங்களை அமைத்தது மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கையால் இலங்கை கிரிக்கெட் சுமார் 70 மில்லியன் கடனில் சிக்கியுள்ளது. அது தொடக்கம் 12 மாத சுழற்சிக்கு பின்னர் வரும் வீரர்களுடனான ஒவ்வொரு சம்பள ஒப்பந்தத்திலும் இழுபறி ஏற்பட்டு வருகிறது.
இருபது-20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் 22 ஆம் திகதி தென்னாபிரிக்காவுடன் மோத வுள்ளது.