புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு- 
17 மார்ச் 2014

கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விபூசிகாவை பொறுபேற்க பல சிறுவர்கள் இல்லங்கள் முன்வந்த போதும் நீதவான் வஹாப்தீன் அவர்கள் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் அனுமதித்துள்ளார்.

மகாதேவா சிறுவர் இல்லம், செஞ்சோலை சிறுவர் இல்லம் என்பன சிறுவர் நன்நடததை அதிகாரிகளினால் சிபார்சு செய்யப்பட்ட போதிலும் வவுனியா அன்பகம் சிறுவர் இல்லம் அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இருப்பதால் விபூசிகாவும் அண்மையில் பூப் அடைந்த சிறுமி என்பதாலும் பெண்களின் பராபரிப்பிலுள்ள அன்பகத்திற்கு கிளிநொச்சி நீதிமன்று அனுமதிதுள்ளது. இதனை தொடர்ந்து வபூசிகா அருட்சகோதரிகளால் வவுனியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதி மன்றில் இன்று பெரும்பாலான சட்டத்தரணிகள் அனைவரும் விபூசிகாவிற்கு ஆதரவாக தங்கள் வாதங்களை முன்வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் விபூசிகா ஒப்படைப்பு
கடந்த 13-03-2014 அன்று தர்மபுரம் முசுறன்பிட்டி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து ஜெயகுமாரியும் அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர்
. இதனை தொடர்ந்து தாய் ஜெயகுமாரி பூசா முகாமுக்கு அனுப்பட்டுள்ள நிலையில் இன்று 17-03-2014 மகள் விபூசிகா வவுனியா அன்பகம் சிறுவர் இல்லத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ad

ad