புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

மலேசிய விமானம் இலங்கையின் வடக்கில் தரையிறக்கப்பட்டதா? புலிகளை தொடர்புபடுத்திய பிஸினஸின்சைடர்ஆங்கில இணையத்தளம்
காணாமற்போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசிய எயார்லைன்ஸ் விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 4 மணி நேரம் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் பிஸினஸின்சைடர் என்னும் ஆங்கில இணையத்தளம் வெளியிட்ட தகவலின்படி,
இராணுவ ரேடார் தரவுகளின் அடிப்படையில் 239 பயணிகளுடன் இந்த ஜெட் விமானம் தீவிரவாதிகளால் அல்லது விமான குழுவினால் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என தெரியவருகிறது.

பாரிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் எங்காவது தரையிறக்கப்பட்டிருக்கலாம் என தற்போது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

4 மணிநேரத்தில் இந்த விமானம் பல இடங்களை சென்றடைந்திருக்க முடியும். மேற்கு நோக்கில் பறந்து சென்றிருக்கலாம் என்று கருதினால் கூட 2 ஆயிரத்து 530 மைல்கள் வரை பயணம் செய்ய தேவையான எரிபொருள் விமானத்தில் இருந்துள்ளது.

அத்துடன் இந்த விமானம் பொது திசையில் திருப்பட்டு இந்தியா அல்லது பாகிஸ்தான் நோக்கி பயணித்திருக்க வேண்டும் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தமான் தீவுகளில் தரையிறக்க சாத்தியம் இருக்கலாம் என்பதால் அதிகாரிகள் தேடுதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவுகளில் பல தீவுகள் மக்கள் குடியேறாத அடர்ந்த காடுகளை கொண்டுள்ளன. அங்கு ஒரே ஒரு விமானம் நிலையம் மட்டுமே உள்ளது.

அழித்தொழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையில் உள்ள இலங்கையின் வடக்கில் இருக்கும் சிறிய மற்றும் ஒழுங்கற்ற விமான ஒடுத்தளத்தில் காணாமற்போன போயிங் 777 விமானம் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என வாசகர் யூகித்துள்ளதாகவும் பிஸினஸின்சைடர் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் குறிப்பிட்ட அந்த பகுதி மோதல்களுக்கு வல்லமை பெற்ற இடமாக காணப்பட்டது.

வடக்கில் உள்ள பெரும்பான்மை தமிழ் சமூகத்தின் பிரிவினைவாத அமைப்பான தமிழ்ப் புலிப் போராளிகளை இலங்கை இராணுவம் 2009 ஆம் ஆண்டு தோற்கடித்தது.

விடுதலைப் புலிகள், உலகில் உள்ள மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, செயலூக்கம் கொண்ட, பயங்கரமான தீவிரவாத அமைப்பு என 2009 ஆம் ஆண்டு டைம்ஸ் விபரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

புலிகளின் தோல்விக்கு பிறகு இலங்கை இராணுவம் அந்த பகுதிகளை மீள கைப்பற்றியது. 

காணாமற்போன விமானம் விபத்துக்கு உள்ளாகி இருந்தால் நிச்சயமாக அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். ஆனால் விமானம் விபத்துக்கு உள்ளான இடம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. 

விமானம் தனது திட்டமிட்ட இலக்கை அடையும் முன்விழுந்து நொருங்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆனால் தடயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

இந்நிலையில், இந்த விமானம் உள்நோக்கத்துடன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அல்லது எங்காவது உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்ற பற்பல யூகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என பிஸினஸின்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad