புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

இந்தியாவின் சிவப்பு விளக்கு பெண்ணின் மகன் மன்செஸ்டர் யுனைடெட்  அணியிடம் 
பாலியல் தொழில் நடத்தும் பெண்ணின் மகன், தெருவோரத்தில் நொறுக்குத் தீனி விற்பவரின் மகன் ஆகிய இருவரும், இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப்
கால்பந்து அணியின் பயிற்சி முகாமில் இணைந்து பயிற்சி பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர்.
ஐரோப்பிய கிளப் கால்பந்து அணிகளில் பிரசித்திபெற்ற மான்செஸ்டர் யுனைடெட் அணி உலகெங்கிலும் உள்ள வளர்இளம் பருவ (டீன் ஏஜ்) மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. கிரிக்கெட் கோலோச்சும் இந்தியாவிலும் அந்த அணி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஸ்பான்சர் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் உதவியுடன் கடந்த ஃபிப்ரவரியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியது.
கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் கோவாவில் உள்ள கிளப்கள் மற்றும் பயிற்சி மையங்களில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஞ்சிப் பாய் மற்றும் ஆர்கா தே இருவரும் இங்கிலாந்து சென்று பயிற்சி பெறுவதற்கு தகுதி பெற்றனர். அவர்கள் இருவரும் வறுமையின் பிடியில் சிக்கியவர்கள்.
கொல்கத்தாவின் கிழக்கே உள்ள, பாலியல் தொழிலுக்குப் பெயர்பெற்ற சோனாகாச்சியைச் சேர்ந்த ரஞ்சிப்பின் தாய் பாலியல் தொழிலாளி.
இந்தத் தொழிலின் மூலம் அவர் நாளொன்றுக்கு ரூ. 200 வீதம் சம்பாதித்து வருகிறார். தன் மகன் புகழ்பெற்ற கால்பந்து அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்றதை அறிந்த அந்தப் பெண், தங்கியிருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு தினமும் நடந்து சென்று பிரார்த்தித்து வருகிறார்.
"பாலியல் தொழிலாளியின் மகன் என்பதற்காக வெட்கப்படவில்லை. என் தாய்தான் எனக்கு ஊக்க சக்தி. கூடிய விரைவில் இந்த சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து என் தாயாரை மீட்டு விடுவேன்' என நம்பிக்கையுடன் தெரிவிக்கும் ரஞ்சிப் கொல்கத்தாவில் உள்ள பள்ளியில் சளைக்காமல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
ரஞ்சிப் மேலும் கூறுகையில், "போர்ச்சுகல் மற்றும் ரியல் மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் என் ரோல் மாடல். அவரைப் போலவே கோல் அடிக்க முயற்சித்து வருகிறேன்' என்றார். மான்செஸ்டர் யுனைடெட் அணி தேர்ந்தெடுத்த மற்றொரு வீரரான ஆர்கா தேயின் தந்தை, கொல்கத்தாவில் தெருவோரமாக நொறுக்குத் தீனி விற்கும் கடை நடத்தி வருகிறார். ஆர்கா தே கூறுகையில், "இங்கிலாந்து செல்லும் அணியில் நானும் இடம்பெற்றிருப்பதை இப்போதும் கூட என்னால் நம்பமுடியவில்லை. என் தந்தை பிரேசில் முன்னாள் வீரர் பீலேயின் ரசிகன். அவர் தான் என் முதல் பயிற்சியாளர். 3 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோயால் இறந்த என் தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே என் இலக்கு. இங்கிலாந்து புறப்படும் முன் என் பக்கத்து வீட்டுக்காரர் ஷூ உள்ளிட்ட உபகரணங்களை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார்' என்றார்.

ad

ad