புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2014

கடந்த வாரம் (மார்ச் 5)மதுரை விமான நிலையத்தில் வைகோவும், மு.க.அழகிரியும் எதேச்சையாகச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது இருவரும் மனம்விட்டு, அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசியுள்ளனர் என்று தெரிகிறது.
""மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெறுகிறீர்கள். மத்திய அமைச்சராகிறீர்கள்' என்று அப்போது வைகோவை அழகிரி வாழ்த்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை பற்றியும் இருவரும் பேசிக்கொண்டதாக சொல்கிறார்கள்''.
இந்தப் பேச்சு, அழகிரிக்கு ஆறுதலாக இருந்ததாக அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
1993-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ நீக்கப்பட்டார். அப்போது, வைகோவின் தூண்டுதலின் பேரில் விடுதலைப் புலிகள் என்னை (கருணாநிதி) கொல்லத் திட்டமிட்டுள்ளனர் என்று கருணாநிதி குற்றச்சாட்டினார்.
அதற்கு வைகோ, அபாண்டமான குற்றச்சாட்டு என்று பதில் கூறினார்.
இதே பதிலை மு.க.அழகிரியும் சமீபத்தில் கூறினார்.
ஸ்டாலின் உடல் நலம் தொடர்பாக அழகிரி கூறிய கருத்தை ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில் என்னால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும் என்று கருணாநிதி கூறினார்.
அதற்கு, மு.க.அழகிரி கூறிய பதில்: அபாண்டமான குற்றச்சாட்டு என்பதே ஆகும்.
இந்த ஒரு அம்சமே அவர்கள் இருவரையும் மனம்விட்டுப் பேசச் செய்திருக்கலாம் என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே மார்ச் 16-ஆம் தேதி மதுரையில் உள்ள அழகிரியின் இல்லத்துக்கு அருகில் இருக்கும் தயா மண்டபத்தில் அவரின் ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.
மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த அழகிரி ஆதரவாளர் ஒருவர் கூறியது:
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மாவட்டத்தில் 80 சதவீத தொண்டர்கள் அழகிரி பக்கமே உள்ளனர். திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய கட்சிகள்கூட அணுகின. மக்களவைத் தேர்தலில் சீட் அளிப்பதாகக்கூட கூறின. ஆனால் அழகிரி எந்த முடிவும் எடுக்கவில்லை. மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுப்பார்'' என்றார் அவர்.
தென்மாவட்ட திமுக நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் மு.க.அழகிரி ஈடுபட்டு வருகிறார்.
திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, தமது ஆதரவாளர்களை அழகிரி சந்தித்து வருகிறார்.
திருவள்ளூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தம் ஆதரவாளர்களின் இல்லத்துக்கே சென்று, அழகிரி நலம் விசாரித்து வந்த நிகழ்வுகளும் நடைபெற்றன.
தொண்டர்களின் இல்லம் தேடிச் சென்று ஆதரவு தேடி வரும் அழகிரி திடீரென தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.
வைகோ, மன்மோகனை அழகிரி சந்தித்தது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையிலும், திமுக தலைமைக்கு எதிராக அழகிரி தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் பணம் கொடுத்தவர்களுக்கே சீட் கொடுக்கப்படுவதாகவும் அழகிரி குற்றம்சாட்டினார்.
தேர்தல் நேரத்தில் அழகிரி மீது மேலும் நடவடிக்கை எடுத்தால், அது தேர்தலைப் பாதிக்கும் என்பதால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது திமுக தலைமை.

ad

ad