கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரிகளின் முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது
கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சிகளாக களம் கண்டன.
வடமாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட மலர்க்கண்காட்சியும் விற்பனையும் நேற்று வியாழக்கிழமை (05.11.2015) நல்லூர் கிட்டுப்பூங்காவில் கார்த்திகைப்பூச்சூடி ஆரம்பமானது. வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு இதனைத் தொடக்கி வைத்தார். ஒருவாரம் தொடர்ந்து இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று ஆரம்பமான மலர்க்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், தங்கள் சட்டைகளில் கார்த்திகைப் பூவை சூடியிருந்தனர்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது, செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை பெயர் மெய்யப்பன். புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி போலீசாரால் கொடூரமாக தாக்கப்பபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே மும்பை காவல்துறையினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் போலீசாரின் கொடூர முகத்தை எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.