புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

உலகில் வளமான நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்த சுவிஸ்


உலகில் வளமான நாடுகளின் வரிசையில் சுவிஸர்லாந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வளமிக்க நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில்
சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
142 நாடுகளை பயன்படுத்தி 8 வகையான பிரிவுகளின் கீழ் லண்டனை தளமாக கொண்டு நிறுவனம் ஒன்று இந்த தரப்படுத்தலை மேற்கொண்டுள்ளது.
நாட்டு மக்களின் நல்லிறுப்பு,பொருளாதாரம், நிறுவன கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, தற்பாதுகாப்பு, தனி நபர் சுதந்திரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது.
எவ்வாறாயினும் உலகில் வளமான நாடுகள் வரிசையில் நோர்வே முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தல் சுவிட்சர்லாந்து உள்ளது.
வளமான நாடுகள் வரிசையில் இலங்கை 61 வது இடத்திலும் இந்தியா 99வது இடத்தில் இருப்பதுடன் பாகிஸ்தான் 130 வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 140வது இடத்திலும் உள்ளன. சீனா 52 வது இடத்தில் உள்ளது.

ad

ad