புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

மகிந்த ராஜபக்ச அரசில் ஆலோசகர் சிவலிங்கம் சத்தீஷ்குமார் இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.

இலங்கை தகவல் திணைக்களத்தின் முன்னாள் மூத்த ஆலோசகரும் மகிந்த ராஜபக்ச அரசில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு
அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராகவும் இருந்த சிவலிங்கம் சத்தீஷ்குமார் பிரித்தானிய விசேட பொலிஸ் பிரிவினரின் உத்தரவுக்கமைய இலங்கையில் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளார்.
சுமார் ஒன்று   இரண்டு கோடி ரூபாய்களை பிரித்தானிய வங்கி ஒன்றில் இருந்து திருடி தனது இலங்கை வங்கி கிளைக்கு மாற்றி அந்த பணத்தை பதுக்கியது தொடர்பாக பிரித்தானிய உளவுத்துறையினரும் அவுஸ்ரேலிய உளவுத்துறையினரும் இணைந்து நடாத்திய விசாரனையின்போது இந்த திருட்டு சிவலிங்கம் சதீஸ்குமாரால் மேற்கொள்ளபட்டமை உறுதிபடுத்தபட்ட நிலையில் இலங்கையில் குற்ற தடுப்பு பிரிவினர் கடந்த வாரம் இவரை கைது செய்துள்ளனர்.
அவுஸ்ரேலிய நாட்டு கோடீஸ்வரர் ஒருவரின் வங்கி அட்டையை திருடி அந்த வங்கி அட்டை ஊடாக குறித்த கோடிஸ்வரனின் வங்கி கணக்குகளுக்குள் திருட்டு தனமாக புகுந்த சதீஸ்கும்பல் குறித்த வங்கி கணக்கில் இருந்து 2 கோடியை இலங்கையில் உள்ள சதீஸ்குமாரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றி இலங்கையில் அந்த பணத்தை எடுத்து பதுக்கியுள்ளனர்.
இதனை விசாரனை செய்த பிரித்தானிய உளவுத்துறையினர் இன்ரபோல் எனப்படும் சர்வதேச பொலிசார் ஊடாக இலங்கையில் உள்ள சதீஸ்குமாரை கைது செய்துள்ளதுடன் திருடபட்ட 2 கோடி பணத்தை மீட்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ad

ad