புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

நாளை இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவொன்று நாளை (09) இலங்கை வரவுள்ளது.

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்த செயற்குழுவினர் கொழும்பில் தமது பயணத்தை ஆரம்பித்து யாழ்ப்பாணம்இகிளிநொச்சிஇமன்னார் முல்லைத்தீவு மட்டக்களப்பு மாத்தளை  திருகோணமலை அம்பாறை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
காணமாற்போனோர் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அது சார்ந்த செயற்பாடுகளில் அரசாங்கத்தின் உண்மைத்தன்மை மற்றும் காணாமற்போனோர் தொடர்பாக வழங்கப்படக் கூடிய தீர்வுகள் குறித்தும் ஐ.நா செயற்குழுவினர் ஆராயுவுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழுவின் துணைத் தலைவர் பெர்னாட் டுஹைம்இடை உன்க் பைக்இமற்றும் ஏரியல் டுலிட்ஸ்கி ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்தின் உறுப்பினர்களும் இலங்கை வருகை தரவுள்ளனர்.
அரசின் உயர்மட்ட அதிகாரிகள்இகாணாமற்போனோரின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ஐ.நாவின் செயற்குழுவினர் இதன் போது சந்திக்கவுள்ளனர்.

ad

ad