புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 நவ., 2015

‘ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் வீழ்த்தியது உண்மை தான்’: வெளியான கருப்பு பெட்டி தகவல்கள் (வீடியோ இணைப்பு)


எகிப்தில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானத்தை வெடிகுண்டு மூலம் தாக்கி வீழ்த்தியுள்ளது உண்மை என விமானத்தில் இருந்த கருப்பு பெட்டி மூலம் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அக்டோபர் 31ம் திகதி அதிகாலையில் 224 பேருடன் ரஷ்ய நாட்டிற்கு சொந்தமான Metrojet Airbus A321 என்ற விமானம் எகிப்திலிருந்து புறப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்கள் சினாய் தீபகற்பத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து நிகழ்ந்த சில மணி நேரங்களில் ‘விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.
ரஷ்ய விமானத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் வடிவமைத்ததால், விபத்து நிகழ்ந்த இடத்து சென்ற அவர்கள் கருப்பு பெட்டியை மீட்டு எகிப்து, ஜேர்மனி மற்றும் ஐயர்லாந்து தொழில்நுட்ப பொறியாளர்களுடன் இணைந்து அதில் பதிவாகியுள்ள தகவல்களை சேகரிக்க முயன்று வந்துள்ளனர்.
இந்நிலையில், கருப்பு பெட்டி குறித்து ஆராய்ந்து வந்தவர்களிடமிருந்து நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில், ‘விமானம் புறப்பட்ட நேரத்திலிருந்து விமானம் அமைதியாகவே பறந்துள்ளது. விமானத்தின் என்ஜின்களில் எந்த குறைபாடும் இல்லை என்பதும் நிரூபனம் ஆகியுள்ளது.
அதேபோல், விமானிகள் மூலமும் அந்த தவறும் நிகழவில்லை என்பதும் அதில் பதிவாகியுள்ளது. ஆனால், பறந்துக்கொண்டு இருந்த விமானத்தில் திடீரென பலத்த ஓசை ஏற்பட்டதுடன் விமானமே அமைதியாக மாறியுள்ளது’ என அந்த கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், ரஷ்ய நாட்டு விசாரணை அதிகாரிகள் இந்த தகவலை மறுத்து மற்றொரு புது தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதாவது, விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் அதில் இருந்த கருப்பு பெட்டி திடீரென செயல்படாமல் போயுள்ளதாக ஒரு மாறுபட்ட தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், வானிலை மாற்றம் காரணமாக வெளிப்புறத்தில் இருந்து இயற்கை சீற்றம் காரணமாக விமானம் வெடித்து சிதறி இருக்கலாம் என கூறியுள்ளனர்.
கருப்பு பெட்டியில் பதிவாகியுள்ள தகவலை பிரான்ஸ் மற்றும் எகிப்து விசாரணை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடும்போது நேற்று வெளியான ரகசிய தகவல்கள் மேலும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad