புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2015

வித்தியா வழக்கு விசாரணைகளில் கூத்தாடும் துவாரகேஸ்வரன்



வித்தியா வழக்கு விசாரணைகளுக்கு வழங்கிவந்த அனுசரணைகளிலிருந்து தான் விலகவுள்ளதாகவும் பெரிதும் அவமானமடைந்துள்ளதாக
துவாரகேஸ்வரன் தெரிவித்ததாக நட்புவட்டாரங்களை மேற்கோள் காட்டி இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வித்தியா வழக்கு விசாரணைகளில் பல சமூக அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் சிரேஸ்ட தமிழ் சட்டதரணிகள் ஒத்துளைப்பு வழங்கிய நிலையில் அவற்றை குழப்பியடித்து நிறுத்திய துவாரகேஸ்வரன் தானே முன்னின்று மேற்கொள்வதாக ஊடகங்களுக்கு காட்டிவந்தார்.
பிரபல சட்டத்தரணி தவராஜா வழக்கு விசாரணைகளில் இருந்து வருத்தத்தோடு விலகுவதற்கு அச்சுறுத்தல்களையும் வழங்கி வித்தியாவின் குடும்பத்தினரையும் திசைதிருப்பியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
அதன் ஒரு அங்கமாவே கொழும்பிலிருந்து சகோதரமொழி சட்டத்தரணிகளை அழைத்துவந்து செல்வாக்கு மிக்கவராக அடையாளம் காட்டி ஐக்கியதேசியக்கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளராக தன்னை இனங்காட்டியிருந்தார்.
உண்மையில் சிரேஸ்ட சட்டத்-தரணி தவராஜா புங்குடுதீவை பிறப்பிடமாகவும் தமிழரசுக்கட்சியின் கொழும்பு மாவட்ட கிழையின் தலைவராகவும் குற்றவியல் பிரிவின் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணியுமாவார்.
இவரிடமிருந்து வித்தியா வழக்கு விசாரணைகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் இலகுவாக தொடர்புகளை கொள்ள இயலுமானதாக அமைந்திருந்ததுடன் ஒருவித நம்பிக்கையும் ஏற்பட்டிருந்தது அந்த நம்பிக்கை நாளை இன்னுமொரு வித்தியாவிற்கு இந்த நிலை தமிழ் மண்ணில் இடம்பெறக்கூடாது என்ற எதிர்பார்பிலே அமைந்திருந்தது.
எனினும் கொலை மிரட்டல்கள் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் வழக்கு விசாரணைகளிலிருந்த பின்வாங்கியிருந்தார் அதற்கான காரணமாக துவாரகேஸ்வரனின் பெயர் பல்வேறு ஊடகங்களினுாடாக உச்சரிக்கப்பட்டு பலரால் கவலை கொள்ளப்பட்டது.
இன்நிலையில் வித்தியா வழக்கு விசாரணைகளில் தான் மும்மரமாக செயற்பட்டமை தொடர்பில் அவமானத்தை தான் எதிர்கொண்டதாகவும் பொருளாதார செலவுகளையும் எதிர்கொள்வதாக தெரிவித்த துவாரகேஸ்வரன் இதன்வாயிலாக தனது எதிர்கால அரசியல் வாழ்கைக்கு நன்மை பயக்கப்போவதில்லையென தெரிவித்து அனுசரணை நடவடிக்களிலிருந்து விலகிக்கொள்ள திட்மிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் துவாரகேஸ்வரன் வித்தியா கொலைவழக்கில் சம்மந்தப்படுவதற்கு சந்தர்ப சூழ்நிலையே காரணமாகும் அதாவது பாராளுமன்ற தோர்தல் (2015) தொடர்பில் கட்சிகள் தமது வேட்பாளர்களின் பெயர்களை வெளியிடாத தருணம் எனினும் அந்த காலப்பகுதிகளில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பில் துவாரகேஸ்வரனின் பெயரும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
அவ்வாறனதோர் எதிர்பார்பு மிகுந்த தருணத்தில் தீவகத்தை குறிவைத்திருந்த துவாரகேஸ்வரனுக்கு புங்குடுதீவு வாக்குகள் தேவைப்பட்டிருந்தது.புங்குடுதீவு வாக்குகள் வெறுமனே துவாரகேஸ்வரனுக்கு மட்டுமல்ல விஜயகலா மகேஸ்வரன் விரி தமிழ்மாறனுக்கும் தேவைப்பட்டிருந்ததே உண்மை.
இவ்வாறு வீணாக சிக்கிக்கொண்ட இருவருக்கு (துவாரகேஸ்வரன், விரி தமிழ்மாறன்)அந்தத் கட்சிகள் இட ஒதுக்கீட்டையே தவித்திருந்தது.எனினும் துவாரகேஸ்வரன் பாராளுமன்றம் செல்லும் விருப்பத்தை அமைச்சர் விஜயகலா அடியோடு பிடிங்கியிருந்தார் என்பது கவலைதரும் விடயம்.
தன்மானத்திற்காக வித்தியா வழக்கில் ஆதரவுகளை தொடர்ந்த நிலையில் தற்போது மனச்சஞ்சலப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
அரசியலுக்காக மூக்கைநுழைத்து தமிழர் மானத்தை விலைபேசும் அரசியல்வாதிகளின் அனாகரீக செயற்பாட்டிற்கு இதுவும் ஓர் உதாரணம்.

ad

ad