புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 நவ., 2015

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!

 முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க ஆளுநருமான எம்.கே.நாராயணன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் கடந்த 2005ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பின்னர் அந்த பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அவரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், எம்.கே.நாராயணன் இன்று (4-ம் தேதி) சென்னை, ஆழ்வார்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, எம்.கே.நாராயணன் மீது தாக்குதல் நடத்திய புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியையச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் மீது தாக்குதல்!