புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

13ஆம் திகதி WT1190F எரியும் துண்­டுகள் நிலத்தில் விழு­வது இலங்கைக்கு ஆபத்து!



விண்­வெ­ளியில் இருந்து வேக­மாக வந்து கொண்­டி­ருக்கும் மர்மப் பொருள் எதிர்­வரும் 13ஆம் திகதி ஹம்­பாந்­தோட்­டைக்கு அப்பால்
100 கி.மீ தொலைவில் கட­லி­லேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறி­வித்­துள்­ளது.
இந்த மையத்தின் விஞ்­ஞானி ஒருவர் இது­கு­றித்து தகவல் வெளி­யி­டு­கையில்,
இந்த மர்­மப்­பொருள், ஆழ்­கடல் பகு­தி­யி­லேயே விழும் என்று பிந்­திய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. எனினும், இந்த மர்மப் பொருள் விழப் போகும் சரி­யான இடத்தை இப்­போது கூற முடி­யாது. அது பூமியில் விழு­வ­தற்கு சில நாட்­க­ளுக்கு முன்னர் தான், விழப்­போகும் சரி­யான இடத்தை உறு­திப்­ப­டுத்த முடியும்.

அது நிலத்தில் விழு­மென்றால் மட்­டுமே, அச்சம் கொள்ள வேண்டும். புவி சுற்­றுப்­பா­தைக்குள் அது நுழையும் போது எரியத் தொடங்கும். எரியும் துண்­டுகள் நிலத்தில் விழு­மாக இருந்தால் அது ஆபத்­தா­னது என்று தெரி­வித்­துள்ளார்.

WT1190F எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள மர்­மப்­பொருள், எதிர்­வரும் 13ஆம் திகதி ஜி.எம்.ரி. நேரப்­படி காலை 6.15 மணி­ய­ளவில், இந்த மர்­மப்­பொருள், இலங்­கைக்கு தெற்கே 65 கடல் மைல் தொலைவில் கடலில் விழும் என்று வானியல் நிபு­ணர்கள் ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
வழக்­க­மாக விண்­வெ­ளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பொருட்கள் வரும்­வ­ழி­யி­லேயே எரிந்து சாம்­ப­லாகி விடும். ஆனால், இந்த பொருள் எரி­யாமல் நேர­டி­யாக பூமியின் மேற்­ப­ரப்பில் மோதும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்த மர்மப் பொருளை 2013இல் முதன்­மு­தலில் விஞ்­ஞா­னிகள் கண்­டு­பி­டித்­தனர்.

இதன் பின் விஞ்­ஞா­னி­களால் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இது, எதிர்­வரும் 13ஆம் திகதி காலை 11.45 மணிக்கு இந்­தி­யப்­பெ­ருங்­க­டலில் இலங்­கையின் தென் பகு­தியில் 65 கி.மீ., தொலைவில் கடலில் விழும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இது சிறிய அளவே இருப்­பதால் பாதிப்பு அரி­தாகத் தான் இருக்கும். உலகம் அழிய வாய்ப்பு இல்லை. பூமி மூன்று பங்கு கடலால் சூழப்­பட்­டுள்­ளதால், கடலில் எங்கு விழுந்­தாலும் பாதிப்பு ஒன்­று­மில்லை.

விண்­வெ­ளியில் சுற்றி வரும் இம்­மா­தி­ரி­யான மர்மப் பொருட்கள் பற்­றிய முழு­மை­யான விப­ரத்தை கண்­ட­றி­வது மிகவும் கடினம்.
இது குறித்து அமெ­ரிக்க விண்­வெளி ஆய்வு மையம் (நாசா) வெளி­யிட்­டுள்ள அறிக்­கை யில், 'விண்­வெ­ளியில் நுாற்­றுக்­க­ணக்­கான செயற்கைக் கோள்கள், விண்­க­லன்கள் ஏவப்­பட்டு சுற்றி வரு­கின்­றன.

இதில், காலா­வ­தி­யான செயற்­கைக்­கோள் கள் செயல்­பாட்­டி­லுள்ள செயற்­கைக்­கோள்­க­ளுடன் மோதுதல் உள்­ளிட்ட கார­ணங்­களால் விண்­வெளி குப்­பைகள் அதி­க­ரித்துக் கொண்டே செல்­கின்­றன.

இவை மணிக்கு 28,100 கி.மீ. வேகத்தில் சுற்றி வரு­கின்­றன. அதுவும் 5 இலட்சம் பொருட்கள் இந்த மாதிரி விண்வெளியில் உள்ளன.

செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று மோதுவதை தடுப்பது கடினமான பணி யாக உள்ளது. தற்போது விண்வெளி குப்பை களை சுத்தம் செய்யும் திட்டத்தை தொடங் கவுள்ளோம் என நாசா குறிப்பிட்டுள்ளது.

ad

ad