தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலே
யே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
யே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்தில் 5 ரஷ்யர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் 40 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இதில் ஒரு குழந்தை உட்பட இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.