புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 நவ., 2015

முதலமைச்சர் கிண்ண சதுரங்கத் தொடரில் யாழ்ப்பாணம் கல்விவலய முடிவுகள்

முதலமைச்சர் கிண்ணத்துக்காக யாழ். கல்விவலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கத் தொடர் கடந்த
ஞாயிற்றுக்கிழமையும் திங்கட் கிழமையும் யாழ்.இந்துமகளிர் கல்லூரியில் நடைபெற்றது. யாழ்ப்பாணம்,நல்லூர்,கோப்பாய் கோட்ட மட்டப் போட்டிகளில் முதல் பத்து இடங்களைப் பெற்ற இந்தத்தொடரின் முடிவுகள்.
பெண்கள் பிரிவு
6வயதுப்பெண்கள் பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அனஞ்ஜா 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த சாந்தவி 2ஆம் இடத்தையும் அதேபாடசாலையின் லக்சியா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
8வயதுப் பெண்கள் பிரிவில் லேக்லான் சர்வதேசஅமெரிக்கன் பாடசாலையைச் சேர்ந்த அக்சயா 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த ஐறினி 2ஆம் இடத்தையும்,கரந்தன் இராமுப்பிள்ளைவித்தியாலயத்தைச் சேர்ந்தஅருள்நங்கை 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
10 வயதுப்பெண்கள் பிரிவில்பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்தகிறிஸ்ரினாநிதுஜா 1ஆம் இடத்தையும்,யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்தஆரபி 2ஆம் இடத்தையும்,உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்தபிரசாயினி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
12வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மதுமிதா1ஆம் இடத்தையும்,கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்ததிலக்சனா 2ஆம் இடத்தையும்,வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த சுவஸ்திகா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
14வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளான கம்சாயினி 1ஆம் இடத்தையும், பிரசாயினி 2ஆம் இடத்தையும், தமிழ்மதி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
16 வயதுப்பெண்கள் பிரிவில் வேம்படிமகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த லாவண்யா 1ஆம் இடத்தையும்,லக்சிகா 2ஆம் இடத்தையும்,யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தேனுசா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
18 வயதுப்பெண்கள் பிரிவில் யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்த தனுஸ்பிரியா 1ஆம் இடத்தையும்,சுமித்திராதேவகி 2ஆம் இடத்தையும்,கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மதுசா 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
18வயதுக்கு மேற்பட்டபெண்கள் பிரிவில் யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்தசாரங்கி 1ஆம் இடத்தையும்,வேம்படிமகளிர் கல்லூரியைச் சேர்ந்தசிவநீபா 2ஆம் இடத்தையும்,யாழ். இந்துமகளிர் கல்லூரியைச் சேர்ந்தபிரதாஜினி 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவு
6 வயது ஆண்கள் பிரிவில் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த சதுக் 1ஆம் இடத்தையும், யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை சேர்ந்த ஜெகராம் 2ஆம் இடத்தையும் பொஸ்கோ பாட சாலையைச் சேர்ந்த சஜீப் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
8வயதுஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையை சேர்ந்த தனுசிகன் 1ஆம் இடத்தையும், சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த அபிசாயிசன் 2ஆம் இடத்தையும் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த வேததர்சன் 3 ஆம் இடத்தையும் பெற்றனர்.
10வயதுஆண்கள் பிரிவில் யாழ். இந்துஆரம்பப் பாடசாலையை சேர்ந்தஆருத்திரன் 1ஆம் இடத்தையும்,பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த லதுசன் 2ஆம் இடத்தையும்,ரமீலன் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
12வயது ஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த தீபக் 1ஆம் இடத்தையும்,டுளீசன் 2ஆம் இடத்தையும்,அனுசங்கர் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
14 வயதுஆண்கள் பிரிவில்
யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மிசோதன் 1ஆம் இடத்தையும், கொக்குவில் இந்துக் கல்லூரியை சேர்ந்த துஸ்யந்தன் 2ஆம் இடத்தையும்,சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
16 வயதுஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த விரோசன் 1ஆம் இடத்தையும், அரன் 2ஆம் இடத்தையும், சென். ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த அனுஜன் 3ஆம் இடத்தையும், பெற்றனர்.
18 வயதுஆண்கள் பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த கஜேந்திரன் 1ஆம் இடத்தையும்,யூட்டிரோசன் 2ஆம் இடத்தையும்,யாழ்.இந்துக் கல்லூரியைச் சேர்ந்த அஜன்ஸ்ரின் 3ஆம் இடத்தையும்பெற்றனர்.
18 வயதிற்குமேற்பட்டஆண்கள் பிரிவில் யாழ். இந்துக் கல்லூரியைச் சேர்ந்த அன்ரூட் 1ஆம் இடத்தையும்,அச்சுவேலி மத்திய கல்லூரியைச் சேர்ந்த கஸ்மன் 2ஆம் இடத்தையும்,யதுசன் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.