புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2015

அமைச்சர் திலக் மாரப்பன இராஜினாமா - இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இராஜினாமா செய்து கொண்டுள்ளார்.
தற்பொழுது அமைச்சர் திலக் மாரப்பனவின் இல்லத்தில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.
இதேவேளை அமைச்சர் திலக் மாரப்பனவின் இராஜினாமா கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜினாமா கடிதம் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தற்பொழுது நடைபெற்றுவரும் விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இராஜினாமா கடிதம் கிடைத்ததாக ஜனாதிபதி அறிவிப்பு
தனது பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு  அமைச்சர் திலக் மாரப்பன, அனுப்பிவைத்துள்ள இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.

ad

ad