புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 நவ., 2015

ஆனந்தா வி.கழகத்தின் உதைப் பந்தாட்ட முடிவுகள்

ஆனந்தபுரம் ஆனந்தா விளையாட்டுக் கழகத்தின் புதிய மைதானத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடத்தப் பட்டுவரும் விலகல்
முறையிலான உதைப்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் குறித்த கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தத் தொடரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்கிழமை, மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற ஆட்டங்களின் விவரங்கள் வருமாறு,
செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆட்டங்களில் முதலாவது ஆட்டத்தில் சுப்பர்றாங் அணியை எதிர்த்து முள்ளியவளை செல்வா அணி மோதிக் கொண்டது. இதில் சுப்பர்றாங் அணி 9:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் வற்றாப்பளை செந்தமிழ் அணியை எதிர்த்து கைவேலி உதிக்கும் திசை அணி மோதிக் கொண்டது. இந்த ஆட்டம் சமநிலைத் தவிர்ப்பு உதைகள் வரை இழுபறிப்பட்டது. சமநிலைத் தவிர்ப்பில் கைவேலி உதிக்கும் திசை அணி 5:4 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
புதன்கிழமை காலை இடம்பெற்ற ஆட்டத்தில் இரணைப்பாலை சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து அளம்பில் இளம்பறவை அணி மோதிக் கொண்டது. இதில் அளம்பில் இளம்பறவை அணி 4:2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவதாக இடம்பெற்ற ஆட்டத்தில் முள்ளியவளை வளர்மதி அணியை எதிர்தது நாவற்காடு வெண்மலர் அணி மோதிக் கொண்டது. இதில் முள்ளியவளை வளர்மதி அணி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.