புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 நவ., 2015

40 ஆயிரம் கஞ்சா பொதிகளுடன் ஆஸி. செல்ல முற்பட்டவர் கைது

ஹெரோயின் மற்றும் கஞ்சாப் போதைப் பொருட்களை விற்பனை செய்துவரும் கடற்றொழிலாளியொருவர் அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல
முற்பட்டபோது வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மாலை வெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது.

36 வயதான இந்நபர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் இதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலிலிருந்து விடுதலையானவர் ஆவார். இவருக்கு எதிராக நான்கு வழக்குகள் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் இவர் மேலதிக தொழிலாக ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் விற்பனையில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் கைது செய்யப்படும் போது 40,000 கஞ்சாப் பைக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை இப்பைக்கட்டுகளை இவர் 500 ரூபா வீதம் விற்பனை செய்து வந்துள்ளார்.