இனி தமிழீழம் என்ற ஒன்று வேண்டுமெனில் முதற்கட்டமாய் காங்கிரசை வேரோடு களைந்தெடுக்க வேண்டும். டெசோ மாநாடு தீர்மானம் தொடங்கும்போது ஈழம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூடாது என்று மத்திய அரசு சொன்னதும் இரவோடு இரவாக ஒட்டிய சுவரொட்டியில் கருப்பு மை கொண்டு ஈழம் என்ற வார்த்தையை அழித்த வெட்கங்கெட்ட திமுக இன்று காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றது. என் நாட்டில் என் மக்களுக்காக நான் ஈழம் என்றுதான் சொல்வேன்...அப்படி ஒரு கூட்டணி எனக்கு தேவையில்லை என்று சொல்ல நாதியில்லை!!
இன்று அதே "ஈழம்" என்ற வார்த்தையை பயன்படுத்தி ஞானதேசிகன் மற்றும் தமிழக காங்கிரஸ், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்று சுவரொட்டி அடித்ததை என்ன வென்று சொல்வது??.....இதை விட வெட்ககேடான விஷயம் காங்கிரசிற்கு இருக்க முடியாது..
இந்த போராட்டத்தில் யாருக்கு தகுதி கிடையாது..
காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு சுத்தமாக தகுதியே கிடையாது என்பது பரவலாக பேசப் படும் செய்தி. அதிமுக மட்டும் என்ன ஒழுங்கா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். ஆரம்பத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் சொன்னதும் இந்த செயலலிதாதான்...ஆனால் அதே செயலலிதா இன்று ராஜபக்சேவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அது அரசியல் நாடகமோ அல்லது நிசமோ??? ஆனால் அந்த நாடகத்தை கூட நடத்த வக்கில்லாமல் உதவி செய்வது போல் நம்பவைத்து கழுத்தருத்தது யார்? ஒரு கட்டத்தில் குடும்ப மானமா? கட்சி மானமா? என்ற கேள்வி வந்த போது என்ன செய்தது திமுக என்பது உலகறிந்த விசயமே? இப்போது கூட ஜெனீவாவில் நடந்த தீர்மானத்திற்கு இந்திய தெரிவித்த விருப்பமில்லா ஆதரவு கூட மாணவர்கள் போராட்டத்தின் வெளிப்பாடுதானே தவிர கலைஞர் நடத்திய டெசோ காமெடி மாநாட்டிற்கு அல்ல...என்பதை மாணவர்கள் நன்கறிவார்கள். அவர் என்னமோ நான் டெசோ மாநாடு நடத்தினதாலே தான் இந்த ஆதரவு என்று படம் காட்டிக் கொண்டிருக்கின்றார்.
இன்னமும் டி.ஆர் பாலு எங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றார்? ராஜினாமா செய்துவிட்டாரா என்று தெரியவில்லை...அழகிரி தனியாக சென்று ராஜினாமா செய்கின்றார். அவர்களுக்குள்ளாகவே ஒரு குழப்பம், தலைவர் வழக்கம் போல ராஜினாமா என்று சொல்வார், ஆனால் செய்யமாட்டார் என்று எதிர்பார்த்து காத்திருப்பது போல் ஒரு பரிதவிப்பு.
மாணவர்கள் தமிழீழம் என்ற பிரச்சினைக்கு மட்டும் போராடக் கூடாது...காங்கிரஸ் என்ற கட்சியை எப்படி வேரறுப்பது என்ற கோணத்திலும்... நாம் நேரடியாக அரசியில் களத்தில் இறங்கி போராட வேண்டும். அப்போதுதான் அவர்கள் நம் வழிக்கு வருவார்கள்.