-
7 ஆக., 2024
சஜித் - தயாசிறி புரிந்துணர்வு ஒப்பந்தம்!
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது |
வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிவான் நீதிமன்றினால் சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது |
19 இந்திய மீனவர்கள் விடுதலை- படகோட்டிகளுக்கு தலா 40 இலட்சம் ரூபா தண்டம்
31 இந்திய மீனவர்களுக்கு எதிரான வழக்கு 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ஜூன் 22ஆம் திகதி 3 படகுகளில் எல்லை தாண்டி வந்து கைதான 22 மீனவர்களில் 19 பேர், ஆறு வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 24 மாத சிறைத் தண்டனை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர் |
மன்னார் வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்!
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியும்,நியாயமும்,கிடைக்க வைத்தியசாலை தரப்பினர் நீதியுடன் நடந்து கொள்வோம் என கூறுகிறார்கள்.அவர்கள் கூறுகின்ற வார்த்தை உண்மையாக இருந்தால் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். |
மாகாண சபைத் தேர்தல் திருத்தச்சட்டம் நிறைவேறியது!
மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்தி மாகாண சபைகளை மீள இயங்க வைப்பதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பில் விவாதம் இன்றி வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. |