பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார் |
-
10 அக்., 2024
மேலும் 20 சீனர்களுக்கு விளக்கமறியல்! [Thursday 2024-10-10 05:00]
தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை! [Thursday 2024-10-10 05:00]
எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. எனவே 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அறிவித்துள்ளது. |
ஜெனிவாவில் வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்! [Thursday 2024-10-10 05:00]
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது |
மட்டக்களப்பில் சங்கு கூட்டணியின் வேட்புமனு தாக்கல்! - உதயகுமாரும் இடம்பெற்றார். [Thursday 2024-10-10 05:00]
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை, மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, நேற்று தாக்கல் செய்தது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம், கோவிந்தன் கருணாகரம் தலைமையில், நேற்று நண்பகல், வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டது |